பொண்ணை விட்டுரு.. 18 வயசுதான் ஆகுது.. கெஞ்சி கதறிய தாய்.. விடாமல் துரத்திய பாபு.. ஆள் வைத்து படுகொலை

இளைஞரை கடத்தி கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "என் பொண்ணை விட்டுடு.. அவளுக்கு 18 வயசுதான் ஆகுது" என்று பாபுவிடம் கெஞ்சினார் கீதா.. ஆனால் பாபு தொடர்ந்து தன் மகளிடம் பழகியதால் ஆத்திரமடைந்த கீதா.. 4 பேர் உதவியுடன் பாபுவை தூக்கி ஆட்டோவில் போட்டு.. கடத்தி.. ஆட்டோவிலேயே கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார்!

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. 32 வயதாகிறது.. கல்யாணம் ஆனவர்.. போன 20ம் தேதி வழக்கமாக வேலைக்கு போனவர் அதற்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.. அதனால் குடும்பத்தினர் பல இடங்களில் பாபுவை தேடியும் கிடைக்காததால், முல்லுண்டு போலீசில் புகார் தந்தனர்.

woman arrested including 4 in murder case near mumbai

போலீசாரும் பாபுவை தேடி வந்த நிலையில், தானே மாவட்டம் சகாப்பூா் பகுதியில் பாபுவை சடலமாக மீட்டனர். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்றும், எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் தெரியவில்லை என்பதால் தீவிர விசாரணை நடந்தது. அப்போதுதான் பாபுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கு வயது 18.. கல்யாணம் ஆகி மனைவி இருந்தும் இந்த இளம்பெண்ணுடன் தவறாக பழகி உள்ளார்.. இந்த விஷயம் பெண்ணின் அம்மா கீதாவுக்கு தெரியவந்துள்ளது.. அதனால் பாபுவை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.. "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. என் மகளுக்கு 18 வயசுதான் ஆகுது.. அவளை விட்டுடு.. தொந்தரவு பண்ணாதே" என்று எச்சரித்துள்ளார்.

ஆனால், பாபு மகளுடனான உறவை துண்டிக்கவே இல்லை.. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா பாபுவை கொல்ல முடிவு செய்தார்.. குடிபோதையில் இருந்த பாபுவை, 3 பேருடன் சேர்ந்து தூக்கி ஆட்டோவில் போட்டு கடத்தினார் கீதா.. பிறகு ஆட்டோவிலேயே பாபுவின் கழுத்தையும் நெரித்துகொன்றார்.

எல்லாரும் சேர்ந்து உடலை சகாப்பூர் பகுதியில் வீசி விட்டு தப்பினர். இந்த விவரங்களை மொத்தமும் பெற்ற போலீசார், கீதாவை கைது செய்தனர்.. ஆனால் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த 3 பேரையும் காணவில்லை என்பதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+