கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் உலக மக்கள் 14.44 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 8,73,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,013 பேராக அதிகரித்துள்ளது.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 8,73,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,013 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 12,28,78,428 குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 1,84,68,705 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 109,707 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 13,930 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,70,880 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 63,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,26,00,834 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 834 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் மொத்த எண்ணிக்கை 583,288 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 25,171,620 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 6,845,926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 71,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,41,22,795 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,157 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3,81,687 பேராக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவிற்கு 34,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,74,288 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தம் 313 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 101,881 பேர் உயர்ந்துள்ளது.
ரஷ்யா, பிரிட்டனில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் துருக்கி நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 61,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,446,591 பேராக உயர்ந்துள்ளது. 362 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35











Click it and Unblock the Notifications