1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறைச்சாலையில் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன் சிறையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குண்டு வெடிப்பைத் திட்டமிடுவதில் யூசுப் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தனது பிளாட் மற்றும் கேரேஜை அனுமதித்ததாக இவர்மீது குற்றச்சாட்டு இருந்தது. 2007ம் ஆண்டு தடா நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications