Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணவில் பூஞ்சை, காலாவதியான பொருட்கள்.. ஜெப்டோ ஸ்டோரேஜ் ரூமில் அதிர்ச்சி! லைசன்ஸ் அதிரடியாக சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ஜெப்டோ உணவு சேமிப்பு கிடங்கில் மிக மோசமான நிலையில் உணவுகள் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. பூஞ்சையுடன் வளர்ந்தும் காலாவதியான உணவுப் பொருட்கள் உடனும் அவை வைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஜெப்டோவுக்கு வழங்கப்பட்ட உணவு லைசன்ஸை சஸ்பெண்ட் செய்து மகாராஷ்டிர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 10 நிமிடங்களில் வீடு தேடி பொருட்களை எடுத்து வரும் இன்ஸ்டன்ட் டெலிவரி சேவை வேகமாக டிரெண்டாகி வருகிறது. நாமும் வீட்டிற்கே பொருட்கள் வந்துவிடுவதால் ஆர்வமாக அதில் பொருட்களை ஆர்டர் செய்து வருகிறோம்.

Zepto s Dharavi Licence Suspended Over Food Safety Lapses Fungus and Expired Goods Found

ஜெப்டோ

இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள தாராவி கிடங்கில் பல்வேறு உணவுப் பாதுகாப்பு மீறல்கள் நடந்துள்ளது. இதையடுத்து ஜெப்டோ என்ற பிராண்டின் கீழ் செயல்படும் கிரணாகார்ட் டெக்னாலஜிஸ் உணவு உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ரத்து செய்துள்ளது. அங்கு ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த உணவில் பூஞ்சை வளர்ந்து இருந்தது தெரிய வந்தது. மேலும், காலாவதியான பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணையமைச்சர் யோகேஷ் கடம் உத்தரவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது இணை ஆணையர் மங்கேஷ் மானே நேரடியாக இந்த ஆய்வை நடத்தியுள்ளார். ஜெப்டோ ஸ்டோர் ஹவுஸில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அங்குச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பல கடுமையான குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது.

உணவில் பூஞ்சை

குறிப்பாக சில உணவுப் பொருட்களில் பூஞ்சை வளர்ந்து அப்படியே இருந்துள்ளது. மேலும், குட்டை போல நீர் தேங்கி இருந்த நிலையில், அதற்கு அருகில் அப்படியே உணவுகள் சேகரித்து வைக்கப்பட்டது. இது மோசமான சுகாதாரத்தில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் காட்டுகிறது. மேலும், சில பொருட்களைச் சேமித்து வைக்கக் குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்பது தரநிலை. ஆனால், அந்தளவுக்குக் கூட வெப்பநிலையைப் பராமரிக்கவில்லையாம்.

சில உணவுப் பொருட்களின் முறையாக ஸ்டாண்டில் கூட வைக்கப்படவில்லை. அவை அப்படியே ஈரமான அழுக்கு தரையில் வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், காலாவதியான உணவுப் பொருட்கள் நல்ல பொருட்களில் இருந்தும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்ததும் தெரிய வந்தது.

லைசன்ஸ் சஸ்பெண்ட்

இதுபோல அங்கே பல்வேறு விதிமீறல்கள் தெரிய வந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முழுமையான விதிகளைப் பின்பற்றும் வரை அந்த ஸ்டோரேஜ் ரூமை மூட ஜெப்டோ அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்களின் உணவு லைசன்ஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியான உடனேயே ஜெப்டோ தரப்பு இது குறித்து விளக்கமளித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனமும் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஜெப்டோ தெரிவித்துள்ளது.

ஜெப்டோ விளக்கம்

இது தொடர்பாக ஜெப்டோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் ஜெப்டோவில், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் மிக உயர்ந்த தரத்தைப் பராமரித்து வருகிறோம். அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறைபாடுகளைச் சரி செய்வதற்கும், எங்கள் யூசர்களுக்கு சிறந்த மற்றும் தரமான பொருட்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+