மேகதாது அணை கட்டுவதிலேயே குறியாக இருக்கும் சித்தராமையா, டிகே சிவகுமார்- தமிழகத்துடன் பேச தயாராம்!
மைசூர்: காவிரியின் குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு) என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையானது பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்கானதுதான்; இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஒரு மாதமாக கொட்டித் தீர்த்ததால் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதேபோல கபினியில் இருந்தும் 30,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டது.

காவிரியில் பெருமளவு தண்ணீரை ஒரேயடியாக கர்நாடகா திறந்துவிட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளமாக காவிரி பாய்ந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் காவிரி ஆற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் பாகினா பூஜை நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனாலும் தமிழ்நாடு அரசு இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தமிழ்நாட்டு அரசுடன் மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். மத்திய அரசு மட்டும் ஒப்புதல் கொடுத்துவிட்டால் மேகதாது அணையை விரைவாக கட்டி முடிப்போம் என்றார்.
மேலும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீணாகவே பெருமளவு நீர் கடலில் கலக்கிறது. இப்படி காவிரி நீர் வீணாவதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் மேகதாது அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த ஒரு அணை கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications