கருப்பு தொப்பி! பந்திப்பூரில் ஜீப் சவாரியில் பிரதமர் மோடி.. டீசர்ட்டை கவனிச்சீங்களா! சிறப்பு என்ன?
மைசூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சபாரி சென்றார். தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்திருந்த பிரதமர் மோடி முற்றிலும் மாறுபட்ட உடை அணிந்து ஜீப்பில் 20 கிலோமீட்டர் சவாரி செய்து பார்வையிட்டார். இந்நிலையில் தான் அந்த உடையின் சிறப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
சென்னை புதிய விமான முனையம் மற்றும் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். இதுதவிர நேற்று ஒரே நாளில் சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சென்னையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து கொண்ட பிரதமர் மோடி நேற்று இரவு தனிவிமானத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்றார். இரவில் அங்கேயே பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலையில் பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கினார்.
அதன்படி இன்று காலையில் பிரதமர் மோடி சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்றார். இங்கு புலிகள் காப்பகம், யானைகள் முகாம் அடுத்தடுத்து உள்ளன. மேலும், இந்த காப்பகத்தில் கரடிகள், மலைப்பாம்புகள், நரிகள் உள்பட ஏராளமானவை உள்ளன. இங்கு சவாரி செய்து இந்த விலங்குகளை பார்க்கலாம்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 20 கிமீட்டர் தொலைவுக்கு ஜீப் சவாரி செய்து வனப்பகுதியை பார்வையிட்டார். இதற்காக பிரதமர் மோடி வித்தியாசமான உடையில் வந்திருந்தார். அதாவது சவாரி செய்வதற்கு ஏற்பவும், வனத்துறையினரை போலவும் அவர் உடை அணிந்திருந்தார்.

எப்போதும் கோர்ட், குர்தா உள்ளிட்ட ஆடைகளை அணிந்து இருக்கும் பிரதமர் மோடி இன்று டீசர்ட் அணிந்திருந்தார். அதாவது Camouflage cloth வகை ஆடை அணிந்திருந்தார். இந்த ஆடை என்பது பழுப்பு அல்லது பச்சை நிறங்களில் இருக்கும். அல்லது 2 நிறங்களும் சேர்ந்தே இருக்கும். இந்த ஆடைகளில் மரங்களின் இலைகள், கிளைகள் போன்ற வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
மரம், செடி, கொடிகளின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடைகள் இருப்பதால் இதனை அணிந்து வனப்பகுதிகளில் சென்றால் நம்மை அடையாளம் காண்பது எளிதாக இருக்காது. பெரும்பாலும் ராணுவம் மற்றும் வனத்துறையினர் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தும்போது இந்த வகை ஆடைகளை அணிவார்கள். அதேபால் பிரதமர் மோடி Camouflage டீசர்ட் அணிந்து அதன் மீது கோர்ட் அணிந்திருந்தார். மேலும் தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தார். இது பார்க்க வித்தியாசமாக இருந்தது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி வித்தியாசமான ஆடை அணிந்து பந்திப்பூர் வனப்பகுதியில் சவாரி செய்தது தொடர்பான வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
****
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications