மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடி இழப்பீடு! கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மைசூர்: மைசூர் அரண்மனைக்கு உடனடியாக ரூ 3400 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மைசூர் அரண்மனை வளாகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலத்தை கர்நாடக அரசு கைப்பற்றியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. இதை சீர் செய்ய பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை விரிவுப்படுத்த கர்நாடகா மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த பணிகளுக்காக, மைசூர் அரண்மனைக்கு சொந்தமான 15.39 ஏக்கர் நிலத்தை மாநில காங்கிரஸ் அரசு 2023 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அரசு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அரச குடும்பத்தினர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம் 15.39 ஏக்கருக்கு ரூ 3400 கோடி இழப்பீடாக வழங்க கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கர்நாடகா அரசும் உச்சநீதிமன்ற பதிவாளர் பெயரில் ரூ 3400 கோடி டெபாசிட்டை செய்தது. இதற்கு அரச குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரூ 3400 கோடியை உடனடியாக அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.
மைசூர் அரண்மனை 1897ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது 1912 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41,47,913 ரூபாய் ஆகும். இங்கு ராஜ தர்பார் மண்டபமும் மல்யுத்த மைதானமும் அந்தப்புரமும் உள்ளது. இங்கு 175 அறைகள் உள்ளன. மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும்.
இங்கு திறந்தவெளி கூடங்கள், மாட மாளிகை, ஆயுத அறை, நூலகம், லிஃப்ட், பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றவது மாடியில் காணப்படுகிறது. இது மரத்தாலான அரண்மனை என அழைக்கப்படுகிறது. இங்கு தீயணைக்கும் எந்திரங்களும் உள்ளன.
இங்கு 18 கோயில்கள் உள்ளன. இந்த அரண்மனை பழைய பரகலா மடத்தின் தலைமையகத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 112 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications