எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பு... 25 இலங்கை மீனவர்கள் கைது... 4 படகுகள் பறிமுதல்
நாகை : நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படை விசாரணை நடத்தி வருகிறது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்தி கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும் நடந்து வருவது தொடர் கதையாகி உள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 51 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட இந்திய கடலோர படையினர் சந்தேகத்தின் பேரில் அப்பகுதிக்கு சென்றனர். இதனால் பதற்றமடைந்த மீனவர்கள் படகுகளை வேகமாக செலுத்த தொடங்கினர். இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் பிடிப்பட்டவர்கள், இலங்கை மீனவர்கள் என்றும் எல்லை தாண்டி வந்து நாகை கடற்பகுதியில் மீன்பிடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, படகுகளில் இருந்த 25 இலங்கை மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர படையினர், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர். காரைக்காலுக்கு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து, கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications