எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி.. தமிழக மீனவர்கள் 32 பேர் கைது.. இலங்கை கடற்படை அடாவடி

Subscribe to Oneindia Tamil

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இரு வேறு இடங்களில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மன்னார் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் 7 பேர், ராமேசுவரத்தில் இருந்து சென்று மீன்பிடித்த 25 பேர் என 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைதாகும் சம்பவங்கள் மீனவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடி செயல்பாட்டை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

32 Tamil Nadu fishermen arrested by Sri lankan Navy

இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை. மீனவர்கள் கைதாகும் சம்பவம் தொடர் கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

25 பேர் கைது: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று பிற்பகலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்தனர்.

யாழ்ப்பாணம் மீன்வளத்துறை: மன்னார் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் 7 பேரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவேறு சம்பவங்களையும் சேர்த்து தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. கைதான மீனவர்களை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

63 மீனவர்கள்: கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 விசைப்படகு, 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 63 மீனவர்கள் இலங்கை சிறையில் தவிக்கும் நிலையில், தற்போது அடுத்து அடுத்து மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+