Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிருக்கிறார்.. இப்படி ஒரு துயரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.. மொத்தம் 75 ஆடுகளாம்..!!

சிவகங்கையை சேர்ந்தவர் நாகராஜ்.. இவர் ஒரு கால்நடை விவசாயி.. நிறைய ஆடுகளை மேய்த்து வருபவர்.. முக்கியமாக, ஒவ்வொரு வருடமும், டெல்டாவில் அறுவடை முடிந்ததுமே, தன்னுடைய ஆடுகளை அங்கு கொண்டு சென்று, மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாம்.

75 goats in Nagapattinam and what happened to Farmer Nagaraj Lorry near kizhvellur

விவசாயி: இவரை போலவே, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்கள் கால்நடைகளை டெல்டா பகுதிக்கு அழைத்து சென்று ஆடுகளை மேய்க்க விடுவார்கள்.. அடுத்த சாகுபடி டெல்டாவில் ஆரம்பிக்கும்வரை, அங்கேயே தங்கியிருந்து இந்த ஆடுகளை இவர்களை மேய்த்து வருவார்கள்..

இதற்கு காரணம், கோடை காலங்களில் அறுவடை முடிந்து வயல்களில் இயற்கை உரத்தின் தேவைக்காக ஆடுகளை கிடை போடுவது வழக்கம்.. இதனால் ஆடுகள் போடும் கழிவுகள், வயல்களில் உரமாக படிந்து, சாகுபடி நேரத்தில் விளைச்சல் அதிகமாக இருக்குமாம்.. இதற்காகவே, வெளி மாவட்டங்களில் இருந்து, நிறைய செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய வயல்களில் ஆடுகளை கிடை போட வைப்பார்கள்.

மேய்ச்சல்: அப்படித்தான், இந்த வருடமும், நாகராஜ் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை, ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிளம்பினார்.. அதேபோல, இன்னொரு விவசாயி சுப்ரமணி என்பவரும் நாகராஜுடன், ஆடுகளுடன் கிளம்பினார்கள். இருவருக்கும் சேர்த்து மொத்தம் 300 செம்மறி ஆடுகளாம்.

அங்குள்ள கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்துக்கு ஆடுகளை மேய்ச்சலை விட முடிவு செய்திருந்தார்.. எனவே, இன்று காலையில், லாரியில் 200 செம்மறி ஆடுகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.

விபத்து: கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி, தாறுமாறாக சாலையில் சென்றது.. பிறகு, திடீரென சாலையோரத்திலிருந்த வயலில் லாரி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி தலைகுப்புறக் கவிழ்ந்ததில் அதிலிருந்த ஆடுகள் அத்தனையும் லாரிக்கும் வயல்வெளிக்கும் நடுவில் சிக்கிக்கொண்டன.

ஆடுகள் வலியால் கதறியதைக்கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஆடுகளை மீட்டனர்.. ஆனாலும் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி இறந்துவிட்டன.. மற்ற ஆடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன... அதேபோல லாரி ஓட்டிவந்த டிரைவரும், பெரிதாக காயமின்றி மீட்கப்பட்டார்.. தகவலறிந்து கீழ்வேளூர் போலீஸார் விரைந்து வந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடுமை: ஆடுகளை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நாகராஜ் வேறு வண்டியில் வந்தார். சம்பவ இடத்துக்கு வந்ததும்தான், விஷயமே அவருக்கு தெரியவந்தது. பலியான ஆடுகளின் மதிப்பு மட்டுமே, கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் இருக்குமாம்.. அதாவது, வயல்களுக்கு செல்லக்கூடிய மண்சாலையில் செல்லும்போது, ஆடுகள் எல்லாமே லாரியின் ஒரு பகுதிக்கு வந்துவிட்டதாம்.

எனவே, பாரம் தாங்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, வயலில் தலைகீழாக விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால், ஆடுகள் சாலையில் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கதிகலங்கி போனார்கள். ஆட்டின் உரிமையாளர்கள், ஆடுகளின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+