விஜய் செல்லும் இடங்களில் இன்று மின்தடை.. நாகை தவெக-வினரின் விநோத கோரிக்கையை ஏற்ற மின்வாரியம்!
நாகப்பட்டினம்: நடிகரும், தவெக தலைவரும் நடிகருமான விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தின்போது அவரது தொண்டர்கள் மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறலாம் என்பதால் நாகப்பட்டினத்தில் விஜய் பிரசாரம் செய்யும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தவெக சார்பில் மின்தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதனை ஏற்று மின்வாரியம் இன்று மின்தடை செய்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் மக்களை சந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மற்றும் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விஜய் அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் வந்து பிரசாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் தான் விஜயின் பிரசாரத்தையொட்டி நாகையில் அவர் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் காலை 11 மணிக்கு நாகையில் பிரசாரத்தை தொடங்கினார்.திறந்த வாகனத்தில் அவர் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அவரை பார்க்க தவெக தொண்டர்கள் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.
நாகை வாஞ்சூர் ரவுண்டனா முதல் புத்தூர் அண்ணா சிலை வரை நடிகர் விஜய் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஞ்சூர், நாகூர், காடம்பாடி, செல்லூர், புத்தூர், புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தவெக தான். தவெக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை தான். நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்தார். அதாவது, விஜயை பார்க்க அவரது ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் ஏறினர். இதனால் அவர்களை மின்சாரம் தாக்கலாம்.
இதனை தடுக்கவே தவெக சார்பில் விஜய் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் தற்காலிகமாக மின்தடை ஏற்படுத்த தவெக சார்பில் மின் வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற மின்வாரியம் இன்று மின்தடை செய்துள்ளது.
முன்னதாக, கடந்த 13ம் தேதி முதல் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை திருச்சியில் விஜய் தொடங்கினார். அன்றைய தினம், ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். உயரமான கட்டடங்கள், மின்கம்பங்கள், மரங்கள், டிரான்ஸ்பார்மரில் கூட பலர் ஏறினர். இதனால் விஜயே பதறிப்போனார்.
அதேபோன்ற சம்பவம் நாகையிலும் நடக்கலாம். இதனால் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க தவெக சார்பில் மின்வாரியத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதும், அதனை ஏற்று மின்வாரியம் மின்சாரத்தை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications