அதிமுக கட்சி அல்ல, கம்பெனி..அதிக முதலீடு செய்தால் பதவி கிடைக்கும்..சொல்வது டிடிவி தினகரன்

அதிமுக கட்சி அல்ல கம்பெனி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கட்சிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நாகை: அதிமுக கட்சி அல்ல, கம்பெனி என்றும், வியாபார கம்பெனியான அதிமுகவில், அதிக முதலீடு செய்தவர்களுக்குதான் பொறுப்பு என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Recommended Video

    அதிமுக கட்சி அல்ல, கம்பெனி..அதிக முதலீடு செய்தால் பதவி கிடைக்கும்..சொல்வது டிடிவி தினகரன்

    நாகையில் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க டிடிவி தினகரன் இன்று நாகை வந்தார்.

    AIADMK is not a political party,it is the company says TTV Dinakaran

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக கட்சி அல்ல, கம்பெனி என்று கூறினார். வியாபார கம்பெனியான அதிமுகவில், அதிக முதலீடு செய்தவர்களுக்குதான் பொறுப்பு என்றும் கடுமையாக விமர்சித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாஜக எதிர்கட்சி கிடையாது, ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கட்சிதான் என்றும் கூறினார். மடியில் கனம் இருப்பதால், ஒரு எதிர்கட்சியாக அதிமுக முறையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    கடந்த வாரம் திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் திமுகவின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

    அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாகத் தான் செயல்படுகிறார்கள். அதற்காக பங்காளிகளுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். திமுகவை எதிர்த்து தேவையானதுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்துகிறார்கள் என்றார். இன்றைய தினம் அதிமுக கட்சி அல்ல அது ஒரு வியாபார நிறுவனம் என்ற குற்றம் சாட்டியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+