மகனின் காதலி மீது ஆசை.. கடத்தி சென்று போகிற வழியில் தாலியை கட்டி சீரழித்த தந்தை.. நாகை கலாட்டா!
மகனின் காதலியை கடத்தி தாலி கட்டிய நபர் கைது செய்யப்பட்டார்
நாகை: காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்து வைப்பதாக நம்பவைத்து.. மகனின் காதலியை நாசம் செய்து.. கடத்தி சென்று.. அவருக்கு தாலி கட்டி.. அடித்து துன்புறுத்தியும் உள்ளார் நித்யானந்தம் என்பவர்!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது செம்போடை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கருப்பு நித்யானந்தம்... அமமுகவை சேர்ந்தவர்.. வயது 45, காய்கறி கடை வைத்திருக்கிறார். இவரது மகன் முகேஷ் கண்ணன்.. 20 வயதாகிறது.. இவர் ஐடிஐ படித்துள்ளார்.. அப்போது தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்..
இருவரும் படித்து முடித்தனர்.. சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் ஒன்றாக வேலையும் கிடைத்தது.. ஒரே ஆபீசில் வேலை பார்ப்பதால், ஒன்றாக லீவு எடுத்து கொண்டு ஊருக்கு வந்தார்கள். இவர்கள் காதல் விவகாரம் இரு வீடுகளுக்கும் தெரியவந்தது. பெண்ணின் வீட்டில் வழக்கம்போல் களேபரம் நடந்தது.. வீட்டில் அடைத்து வைத்துவிட்டனர்.

நித்யானந்தம்
ஆனால் முகேஷ் வீட்டிலோ நிலைமை தலைகீழ்... கட்டினால் அந்த பெண்ணைதான் கட்டுவேன் என்பதில் முகேஷ் உறுதியாக இருந்தார்.. நித்யானந்தமும் மகன் காதலுக்கு எதிர்ப்பு காட்டவில்லை.. காரணம் மகனின் காதலி மீது கருப்பு நித்யானந்தத்துக்கு ஒரு கண் விழுந்தது.. அதனால் நேரடியாக காதலை துண்டிக்காமல், அதற்காக ரகசியமாக பிளான் பண்ணினார்.

கல்யாணம்
சம்பவத்தன்று மகனின் காதலி வீட்டுக்கு நித்யானந்தம் சென்றார்.. பெண்ணை தனியாக சந்தித்து பேசினார்.. "என் மகனுடன் கல்யாணத்தை நான் செய்து வைக்கிறேன்.. என்னுடன் நம்பி இப்போதே கிளம்பி வா" என்று சொன்னார். இதை நம்பி அந்த பெண்ணும், வருங்கால மாமனார் என்று நினைத்து கொண்டு கூடவே சென்றார்.. செம்போடை பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் பெண்ணை கடத்தினார்.. கார் போய் கொண்டிருந்தபோது, போற வழியிலேயே காரை நிறுத்தி பெண்ணை மிரட்ட ஆரம்பித்தார்.

பலாத்காரம்
அப்போதுதான் பெண்ணுக்கு விஷயம் புரிந்து பதறினார்.. ஆனால் அதற்குள் அவரை மிரட்டி தாலியை கட்டி.. பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது.இதற்கு பிறகு அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் - பவுன்ராஜவள்ளியின் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்... இனி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.. அதேசமயம் மகனிடம் வந்து, "அந்த பெண் இன்னொருத்தனுடன் ஓடிப்போய்விட்டார்" என்று பிளேட்டை மாற்றி சொல்லி உள்ளார்.

பலாத்காரம்
அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து சமயம் பார்த்து இளம்பெண் தப்பி பிழைத்து ஓடிவந்துள்ளார்.. நேராக வேதாரண்யம் மகளிர் ஸ்டேஷனில் எல்லாவற்றையும் சொல்லவும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. பெண் தந்த புகார் தந்ததன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் கருப்பு நித்யானந்தம் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இப்போது நித்யானந்தம், உடந்தையாக இருந்த தம்பதி ஆகிய 3 பேரும் கைதாகி திருச்சி ஜெயிலில் உள்ளனர்.
மகனின் காதலியை கடத்தி.. தாலி கட்டி.. பலாத்காரம் செய்த தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications