Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மென்சஸ்" சார்.. பெயின் ஆ இருக்கு.. கெஞ்சிய மாணவி.. பரவாயில்ல பாப்பா, கிளம்பி வா.. பகீர் சதீஷ் ஆடியோ

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகை: ஆசிரியர் சதீஷ் மாணவியிடம் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.. இந்த ஆடியோவை கேட்டு பெற்றோர்களும், பொதுமக்களும் ஆவேசமாகி வருகிறார்கள்.

நாகையில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் நர்சிங் கல்லூரி.. இங்கு உள்ளூர் மற்றும், வெளியூரில் இருந்து மாணவிகள் படித்து வருகிறார்கள்..

வெளியூர்களில் இருந்தும் நிறைய மாணவிகள் தங்கி படிப்பதால், இவர்களுக்காக ஹாஸ்டல் வசதியும் இங்கு உண்டு.. இந்த நர்சிங் காலேஜில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்தான் இப்போது சிக்கி உள்ளார்.

சில்மிஷம்

சில்மிஷம்

உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரியும் அவர் பெயர் சதீஷ்.. மாணவிகளிடம் இவர் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.. இங்குள்ள மாணவிகள் யாரும், அங்குள்ள மாணவர்களுடன் பேசக்கூடாது என்ற விதி உள்ளது.. சதீஷ்.. அப்படி யாராவது பேசினால், அந்த மாணவியை தனியாக அழைத்து கண்டித்தும் வந்துள்ளார்.. இந்த கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் என்றில்லாமல், தம்பி போன்று வயதில் குறைந்த மற்ற மாணவர்களிடமும், மாணவிகள் யாரும் பேசக்கூடாது என்று ஆசிரியர் சதீஷ் கண்டிப்புடன் சொல்லி வந்திருக்கிறார்.. மீறி பேசுபவர்களை கண்டிப்பது போல தனியாக அழைத்து, பாலியல் சீண்டலிலும் ஈடுபடுவாராம்.

 மாதவிலக்கு

மாதவிலக்கு

அந்தவகையில், ஒரு மாணவி மீது புகார் வந்துள்ளது.. அதனால், அந்த மாணவிக்கு போனை வீட்டு, தன் வீட்டிற்கு வரசொல்லி உள்ளார் சதீஷ்.. அந்த மாணவியோ, நான் நாளைக்கு காலேஜ் வருகிறேன், மாதவிலக்கு, என்று சொல்லியும் கேட்காமல், உடனடியாக வீட்டுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார்.. அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசியுள்ளார்.. இந்த ஆடியோ, கலெக்டர் அருண்தம்புராஜ் உட்பட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்தது.. அக்கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி தாளாளரை சூழ்ந்து கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இந்த கல்லூரியின் தாளாளர் கார்த்திகேயன், பாஜக மாவட்ட தலைவர் ஆவார்.. மது போதையில் ஆசிரியர் சதீஷ் இதுபோல் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்றும் சதீஷை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும், என்றும் கார்த்திகேயன் சொல்லியும், மாணவிகளின் கொந்தளிப்பு அடங்கவில்லை. இதனிடையே, மாணவி அனுப்பி வைத்த ஆடியோ தொடர்பாக, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டதன்பேரில், மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் காலேஜூக்கு வந்து விசாரணை நடத்தினர்.

 லீக் ஆடியோ

லீக் ஆடியோ

மாணவிகள் எல்லாரையுமே தனித்தனியாக அழைத்து விசாரித்து, அவர்களிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கி கொண்டனர்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. அவர்களின் வாக்குமூலங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதியளித்த அதிகாரிகள், கலெக்டரிடம் அவைகளை சமர்ப்பிக்க போவதாகவும் கூறியிருந்தனர்.. இறுதியில் நேற்றிரவு சம்பந்தப்பட்ட சதீஷையும் போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, மாணவியிடம் ஆசிரியர் சதீஷ், பேசும் ஆடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. அந்த ஆடியோ விவரம் இதுதான்:

ஆசிரியர்: ஹலோ..

மாணவி: சார் கேட்குதா?

ஆசிரியர்: ம்.. சொல்லுடா

மாணவி:" சார் இன்னைக்கு வேண்டாமே சார்..

ஆசிரியர்: ஏன்டா

மாணவி: மென்சஸ்ஸா இருக்கு.. பெயின் ஓவரா இருக்கு.. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல

ஆசிரியர்: பரவாயில்லை.. நான் பார்த்துக்கறேன் வா

ஆசிரியர்: இப்போ எங்கே இருக்கே?

மாணவி: நான் இன்னும் கிளம்பல சார்

ஆசிரியர்: கிளம்பு இப்போவே

மாணவி: இல்ல சார்.. நான் வரல சார்

ஆசிரியர்: ஏன் பாப்பா?

மாணவி: இல்ல சார்.. வேண்டாம், நான் வரல

ஆசிரியர்: நீ இப்போ வர்றே.. சரியா

மாணவி: நான் வரல.. வீட்டுக்கெல்லாம் வேணாம் சார்

ஆசிரியர்: புரியல

மாணவி: நான் வரல சார்

இவ்வாறு அந்த ஆடியோ உள்ளது.. வேலியே பயிரை மேய்ந்துள்ளது.. வெறும், சஸ்பெண்ட், டிரான்ஸ்பர் என்று மட்டுமே, தண்டனையை சுருக்கி விடாமல், துறைரீதியான கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் இவர் மீது எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. இதுபோன்றவர்கள் பிள்ளைகளுக்கு, பாடம் நடத்தும் தகுதியே கிடையாது என்பதை அறிவித்து, அவர்களின் ஆசிரியர் பட்டத்தையே பறிக்கப்பட வேண்டும் என்றும் கொதித்து போய் சொல்கிறார்கள்.. ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது?

மென்ஸஸ்

மென்ஸஸ்

முன்னதாக, ஆசிரியர் சதீஷை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.. மாணவி ஆசிரியருடன் பேசிய ஆடியோவை, பெற்றோர் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தாலும், போலீசில் இதுகுறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.. கல்லூரியில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், அவர்களிடம் விசாரணை என்றே 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இறுதியாகத்தான் கல்லூரி நிர்வாகம் சார்பிலேயே ஆசிரியர் மீது புகார் தரப்பட்டது.. அதற்கு பிறகுதான் நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. கைதான சதீஷ், பல மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அது குறித்தும் விசாரணை விரைவில் துவங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் போலீசார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+