இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு.. வேட்டுவம் பட சூட்டிங்கில் ஸ்ட்ண்ட் கலைஞர் உயிரிழந்த விவகாரம்!

Subscribe to Oneindia Tamil

நாகை: இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகையில், வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரத்தில் அவர் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகையில், வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரத்தில் அவர் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pa Ranjith Shooting Cinema

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக பா ரஞ்சித் உள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது பா ரஞ்சித் வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. நாகைப்பட்டினத்தில் இதற்கான சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது சண்டைக் காட்சியின் போது, ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் இறந்தார்.

சூட்டிங் ஸ்பாட்டில் காரில் இருந்து ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரத்தில் அவர் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+