"வெயிலோடு உறவாடி".. வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி படுமும்முரம்.. வரிந்து கட்டி களமிறங்கிய பெண்கள்

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

நாகை: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது... ஏராளமான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் உப்பு உற்பத்தி, தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்களில் பிரதானமாக நடைபெறும்.. இதில், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம்.

இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது...

 வேதாரண்யம்

வேதாரண்யம்

ஒரு டன் உப்பு சராசரியாக ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 உற்பத்தி பாதிப்பு

உற்பத்தி பாதிப்பு

நடப்பு ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டுவிட்டது.. எனினும் 2 மாதங்களுக்கு முன்பு, உற்பத்திக்கான வேலைகள் ஆரம்பமாயின.. தற்போது கோடை வெயில் அதிகரிப்பதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் துவங்கியுள்ளது. வேதாரண்யத்தில் கடந்த 15 நாட்களாகவே கடுமையான வெயில் அடித்து வருகிறது.. தண்ணீரை வெளியேற்றி உப்பு சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..

பாதிப்பு

பாதிப்பு

இதனால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி அளவை இந்த ஆண்டும் எட்ட முடியும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கையாக சொல்கிறார்கள்.. கடந்த 2 மாதம் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் அதே இலக்கை எட்டுவதற்காக உப்பு உற்பத்தியாளர்கள், சுள்ளென அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்...

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

இதற்காக அதிகாலையிலேயே தங்கள் வேலையையும் தொடங்கி விடுகிறார்கள்... ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுவதால் ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது... ஆட்கள் கூடுதலாகவே கிடைப்பதால், வேலை தட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டிருப்பது, இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... அதிலும் இந்த முறை, ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கிவிட்டதால், ஏராளமான உப்புகள் உற்பத்தியாகி கொண்டிருக்கின்றன..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+