பாஜக அல்லது தவெக? சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்.. காளியம்மாள் கொடுத்த அப்டேட்!
நாகை: சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார். தவெக, பாஜக உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது தொடர்பான கேள்விக்கு, பல கட்சிகள் தன்னுடன் பேசி வருவதாக கூறிய காளியம்மாள், எந்தக் கட்சியுடன் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவருக்கும் சீமானுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாதகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பாக காளியம்மாள் விலகினாள். இதனால் நாதகவின் முக்கிய அடையாளமாக இருந்த காளியம்மாளை தங்கள் கட்சியில் இணைக்க திமுக, காங்கிரஸ், தவெக உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்தன.

ஆனால் திமுகவிடம் காளியம்மாள் வைத்த டிமாண்ட் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ராஜ்ய சபா எம்பி பதவியை காளியம்மாள் கோரியதால், திமுகவினர் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கினர். இதையடுத்து காளியம்மாள் இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை. மீனவர்கள் நிகழ்ச்சிகளில் மட்டும் காளியம்மாள் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து காளியம்மாள் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமையை பெற்று தருவதற்கான அத்தனையையும் செய்வேன். அவர்களின் பிரதிநிதியாக வென்று முடிப்பேன். அது எப்படி, என்ன சூழலில் என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
தவெகவில் இணையப் போவதாக நீங்கள்தான் கூறுகிறீர்கள்.. இதற்கான முடிவை நான் ஒருநாள் சொல்வேன். பிடி செல்வக்குமார் திமுகவில் இணைந்தது அவரின் முடிவு.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கருத்து இருக்கும்.. அவர்கள் ஒரு அமைப்பில் இணைந்த பின், என்ன மக்கள் பணி செய்கிறார்கள் என்பதே முக்கியம். பாஜக மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் பேசுகிறார்கள்.
ஆனால் எந்தக் கட்சியில் இணைவேன் என்பதை ஒருநாள் நான் சொல்வேன். எங்களுக்கு இத்தனை சதவிகித வாக்கு சதவிகிதம் வாக்குகள் இருக்கிறது என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் சொல்வது தான். ஆனால் இறுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதுதான் உண்மை நிலவரம் தெரிய வரும். அதன்பின் அவர்களின் கட்டமைப்பை நகர்த்துவதும், அதற்கான வேலையை செய்வதையும் தவறு என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
NTK Seeman: சட்டமன்றத் தேர்தலில் சீமான் ஜெயிப்பாரா? - பிரபல எண்கணித ஜோதிடர் கணிப்பு -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications