எஸ்பி வளைந்து போகச் சொல்கிறார்.. நேர்மையாக இருந்ததால் வந்த சிக்கல்.. டிஎஸ்பி சுந்தரேசனின் ஆடியோ!
மயிலாடுதுறை: நேர்மையாக இருந்த காரணத்திற்காக இவ்வளவு சிக்கலை அனுபவிக்க வேண்டுமா என்று 4 சக்கர வாகனம் பறிக்கப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. வளைந்து கொடுங்கள், இல்லையென்றால் உடைத்துவிடுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னிடம் கூறியதாக சொல்லும் சுந்தரேசன், மனித உரிமை ஆணையத்தில் அஸ்ரா கார்க் ஆட்கள் மீது புகார் அளித்ததற்காக டார்ச்சர் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி-யாக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். இவர் நான்கு சக்கர வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகத்திற்கு சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையாகியது. இதனால் டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து அரசு வாகனம் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியாகியது.
தொடர்ந்து, அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது. இந்த நிலையில் அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக டிஎஸ்பி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் டிஎஸ்பி சுந்தரேசன் பேசுகையில், ஜூலை 5ஆம் தேதி அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணிக்கு எங்களின் வண்டியை கேட்டனர். ஆனால் புரோட்டோக்காலில் கிடையாது.

டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம்
இதனால் வண்டியை தர மறுத்துவிட்டேன். அவ்வாறு வாகனம் கேட்டால், அதற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏடிஜிபி ஜெயராமனுக்கு ஒரு பிரச்சனை வந்தது. உத்தரவு இல்லாமல் வாகனம் வெளியில் சென்ற பிரச்சனை. எனவே, உத்தரவு தரும்படி கோரினேன். ஆனால் வாகனத்தை கொடுக்காததால், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து என்னை மைக்கில் அழைத்தனர்.
தொடர்ந்து, என்னை உடனே திருச்செந்தூர் பந்தோஸ்து பணிக்கு செல்லும்படி கூறினர். 3 நாட்களுக்கு பின், மீண்டும் திருவாரூர் பாதுகாப்பு பணிக்கு செல்ல அறிவுறுத்தினர். அதன்பின் மீண்டும் பணிக்கு திரும்பிய போது, என் வாகனத்தை அமைச்சர் மெய்யநாதன் கான்வாய்க்கு மீண்டும் கேட்டனர். அப்போது நான், வாகனத்தை கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வாகனத்தில் சிக்கல் உள்ளது.
அதனை நீங்கள்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். பின் ஜூலை 10ம் தேதி எனது வாகனத்தை கொடுத்தேன். அந்த வாகனம் இன்றுவரை மீண்டும் கொடுக்கப்படவில்லை. சில நாட்கள் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றேன். என்னிடம் சொந்த வாகனம் கிடையாது. மற்ற போலீசாரிடம் கடன் வாங்க முடியாது. இதனால் 2 நாட்களாக நடந்தே அலுவலகத்திற்கு சென்றேன்.
700 பேரை சிறையில் அடைத்திருக்கிறேன்
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் பொறுப்புக்கு வந்தன்பின், சுமார் 1,200க்கும் அதிகமான மதுவிலக்கு வழக்குப் போட்டுருக்கிறேன். அதில் 700 பேரை கைது செய்திருக்கிறேன். 5 பேரை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளோம் . இது எல்லைப் பகுதி என்பதால், தீவிர வாகன சோதனை செய்து மது கடத்தலை கட்டுப்படுத்தி வந்துள்ளோம். இதனால் அதிகாரிகளுக்கு சரியாக பணம் சென்று சேரவில்லை.
இதுவரை வந்த பணம் எல்லாம் நின்றுவிட்டது. இதனால் எஸ்பி, என்னை அழைத்தார். அப்போது, வளைந்து கொடுங்கள், இல்லை என்றால் உடைத்து விடுவார்கள் என்று கூறுகிறார். ஒரு அதிகாரியிடம் பேசும் பேச்சா இது.. இதுபோன்ற அதிகாரிகளிடம் நாங்கள் எப்படி வேலை செய்வது.. நான் நேர்மையாக இருந்த காரணத்துக்காக இவ்வளவு சிக்கலை அனுபவிக்க வேண்டுமா?
நான் மனித உரிமை ஆணையத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எப்போதும் நேர்மையாக இருந்திருக்கிறேன். என் அலுவலகத்தில் ஒரு டாய்லெட் கூட கிடையாது. எனது அலுவலகத்தை பார்க்கிறீர்களா.. அதில் அமர்ந்து பணியாற்ற கூட முடியாது. அதனால் எஸ்ஐ ஒருவர் வீட்டில் இருந்த பழைய ஏசி ஒன்றை கொடுத்தார்கள்.
எஸ்பி சொன்ன விஷயம்
பின், எஸ்பி என்னை அழைத்து, சுந்தரேசன் எனக்கும் உங்களுக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை. உளவுத்துறை ஐஜி செந்தில்குமாரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யும் உங்களை டார்ச்சர் செய்ய சொல்கிறார்கள் என்கிறார். இது எந்தவிதமான நியாயம்? நான் மனித உரிமை ஆணையத்தில் அஸ்ரா கார்க் ஆட்கள் மீது புகார் கொடுத்தேன் என்பதற்காக என்னை இவ்வளவு டார்ச்சர் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
அண்ணாமலை வலியுறுத்தல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் சுந்தரேசன்.
அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டிஎஸ்பி சுந்தரேசன் அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் சங்கர் ஜிவால் தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications