நாகையில் கடற்கரையில் மர்ம பொருள்.. மாதா கோயில் கிட்ட எரிந்த சிவப்பு விளக்கு.. ஆடிப்போன நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: தமிழக கடற்கரை பகுதிகளில் சமீபகாலமாக சில மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றன.. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கதிகலங்கி போய்விடுகிறார்கள்.. அந்தவகையில், நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சில மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி உள்ளன.. மூன்றரை அடி நீளத்தில் காணப்படும் அந்த பொருட்கள் என்ன? என்பது விவாத பொருளாக மாறியுள்ளது.
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பொருளின் மீது “Made in USA” என எழுதப்பட்டிருந்ததுடன், முன்பகுதியில் எல்.இ.டி விளக்கு மின்னியதால், இது வெடிகுண்டாக இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள பிரதாப ராமபுரம் என்ற கிராமத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.. அப்போது கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதை கண்டனர்.. அந்த பொருள் மணலில் பாதியாக புதைந்த நிலையில் விசித்திரமான தென்பட்டது..

நாகை மாதா கோவில் கடற்கரை
மாதா கோவில் கடற்கரை பகுதியில் சுமார் மூன்றரை அடி நீளமுள்ள ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கிடப்பது கிராம மக்களுக்கு தெரிந்து விரைந்து வந்தனர்..ராக்கெட், ஏவுகணை போன்ற வடிவத்தில் அந்த பொருட்கள் இருந்ததால், அவர்கள் உடனடியாக கீழையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினரும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் யாரும் அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இரண்டு பைப்புகள் - மேட் இன் யுஎஸ்ஏ
பிறகு கடற்கரையில் கிடந்த அந்த கருவியை பறிமுதல் செய்தனர்.. அந்த கருவி, மூன்றரை அடி நீளத்தில், 20 செ.மீ, மற்றும் 15 செ.மீ. சுற்றளவுகளை கொண்ட, இரண்டு ஃபைபர் பைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இரண்டு பைப்புகளும் அரை அடி உயரத்தில் ஏற்ற இறக்கமாக இணைக்கப்பட்டு, இடையில் கம்பி பொருத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது..அதன் முனையில் கூம்பு வடிவம் இருந்ததுடன், அதில் பொருத்தப்பட்டிருந்த சிறிய எல்இடி விளக்கு தொடர்ந்து வெளிச்சத்துடன் எரிந்து கொண்டேயிருந்தது.. அதன் பின்பக்கத்தில் “Made in USA” என்ற வாசகம் இருந்தது..
சிகப்பு கலர் சிக்னல் லைட்
இதனால், இது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஏதாவது நவீன கருவியா, அல்லது கடலில் ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் சாதனமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. சிலர் அதில் சிகப்பு கலர் சிக்னல் லைட் எரிந்து கொண்டேயிருந்ததை கண்டு, ஒருவேளை ராக்கெட் வெடிகுண்டாக கருதி அச்சமடைந்தனர்.பிறகு, நாகப்பட்டினம் மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த பொருளை தீவிரமாக ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர்..
ராக்கெட் லாஞ்சராஇதுகுறித்து காவல்துறை தரப்பில் சொல்லும்போது, “மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. முழு சோதனை முடிந்த பிறகே, அது என்ன வகை கருவி என்பது உறுதி செய்யப்படும். மர்ம பொருள் ராக்கெட் லாஞ்சரா அல்லது வேறு ஏதாவது வெடி பொருளா என்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது..தேவையானால் கடற்படை அல்லது கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்மப் பொருள் கடற்கரையில் கிடந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications