மீண்டும்.. மீண்டுமா? நாகை - இலங்கை இடையேயான கப்பல் சேவை நாளை இல்லை.. பயணம் திடீர் ஒத்திவைப்பு
நாகப்பட்டினம்: நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் ஒத்திவைக்கப்பட்ட இந்த கப்பல் சேவையானது மீண்டும் மே 17 ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ‛செரியாபாணி ' என பெயரிடப்பட்ட கப்பலை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பிரதமர் மோடி பச்சை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மழையை காரணம் காட்டி நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் நாளை (மே 13)ம் தேதி நிறுத்தப்பட்ட கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தான் நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாளை கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போய் உள்ளது. நாகை வர வேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் இந்த ஒத்திவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாகையில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் செல்ல இருந்த சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இ ருப்பினும் மீண்டும் நாகை -இலங்கை இடையே மீண்டும் மே 17 ம் தேதி கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் நாகை-இலங்கை இயக்கப்பட்ட கப்பலுக்கு செரியாபாணி என பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ‛சிவகங்கை' என பெயர் கொண்ட கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்த கப்பல் அந்தமானில் இருந்து கடந்த 10ம் தேதி சென்னை வழியாக நாகப்பட்டினம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது நாகை-இலங்கை இடையேயான சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயணிப்பவர்கள் கீழ்தளம், மேல்தளம் என 2 இடங்களில் அமர்ந்து பயணிக்கலாம். கீழ்தளத்தில் 130 பேருக்கான இருக்கை உள்ளது. அதேபோல் சிறப்பு வகுப்பு என அழைக்கப்படும் மேல்தளத்தில் 25 இருக்கைகள் உள்ளன. கீழ்தளத்தை காட்டிலும் மேல்தளத்தில் பயணித்தால் கடல் அழகை நம்மால் முழுவதுமாக ரசிக்கலாம். ஆனால் கட்டணம் என்பது கொஞ்சம் அதிகமாகும்.
அதாவது கப்பலின் கீழ்தளத்தில் அமர்ந்து செல்ல பயணி ஒருவருக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணமாக ரூ.5000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேல்தள இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் ரூ.7000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.7,670 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நாகை- இலங்கை கப்பல் சேவை அமலுக்கு வரும் நிலையில் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து கப்பல் புறப்படும். அதன்பிறகு மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகம் செல்லும். அங்கிருந்து மீண்டும் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம்.
இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் பாஸ்போர்ட் இருந்தாலே சுற்றுலா, தொழில் முறை பயணமாக இந்த கப்பல் மூலம் பொதுமக்கள் இலங்கை சென்று வர முடியும் என்பதால் இந்த கப்பல் சேவையை பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இந்த சேவையை தொடங்குவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications