எகிறும் பெட்ரோல் விலை.. புதுமாப்பிள்ளைக்கு சைக்கிளை சீதனமாக கொடுத்த பெண் வீட்டார்!
Subscribe to Oneindia Tamil
நாகை: பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் புதுமாப்பிள்ளைக்கு சைக்கிளை வாங்கிக் கொடுத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் பெண் வீட்டார்.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ளது கோமல் கிராமம். இங்கு திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு பெண் வீட்டார் சைக்கிளை சீதனமாக கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. மேலும் இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வதற்கும் நேரம் இல்லாமல் இருக்கிறது.
இதனால் சைக்கிளை பயன்படுத்தினால் உடற்பயிற்சி செய்தது போலும் இருக்கும். பெட்ரோலை மிச்சப்படுத்தினது மாதிரியும் இருக்கும் என்று தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை வானை முட்டிக் கொண்டு செல்கிறது. இதுபோல் கடலூர் அருகே திருமண வீட்டில் மாப்பிள்ளைக்கு 5 லிட்டர் பெட்ரோலை நண்பர்கள் பரிசளித்தனர்.












Click it and Unblock the Notifications