"கழுத்தில் பச்சை நிற எண்கள்!" வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய படகு! வெளிநாட்டு இளைஞர் கைது! பரபர பின்னணி
நாகை: வெளிநாட்டுப் படகு ஒன்று வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் தொடர்பாகப் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில காலமாகவே நாட்டின் எல்லையில் பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை நாம் சில வாரங்களில் கோலாகலமாகக் கொண்டாட உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ரப்பர் படகு
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்காடு என்ற பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த ரப்பர் படகில் யாரும் இல்லாத நிலையில், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கடலோர காவல் படையினர், ரப்பர் படை கைப்பற்றினர்.

மோப்ப நாய்
13 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்ட அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது. மேலும், அதில் இலங்கை நாட்டில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், காலணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மோப்ப நாய் ரப்பர் படகை மோப்பமிட்ட பின்னர், அருகே இருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து. இருப்பினும் யாரையும் பிடிக்கவில்லை. டிரோன் மூலம் அங்கு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், வெளிநபர்களைக் கண்டால் தகவல் கூறும்படி அங்கிருந்த கிராமங்களுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு நபர்
வெளிநாட்டினர் யாரேனும் நாச வேலைக்காக நுழைந்துள்ளனரா அல்லது இலங்கையில் இருந்து யாரேனும் தஞ்சம் புக இந்த படகைப் பயன்படுத்தினரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

யார் அவர்
அதில் அவர் குறித்துப் பல முக்கிய தகவல்களை போலீசார் கண்டறிந்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் போலந்து நாட்டின் வாடடிஸ்டா என்பது தெரிய வந்தது. 40 வயதான வாடடிஸ்டா, கடந்த 2019 அக்டோபர் மாதம் இலங்கை சுற்றிப்பார்க்க அங்குச் சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் சிலரைத் தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்த போதும், அந்த வழக்கை முடித்துவிட்டுத்தான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை மக்கள் கொடுத்த ஐடியா
இதன் காரணமாக இலங்கை அரசும் இவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு, அதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக அவரால் இலங்கையை விட்டு வெளியேற முடியவில்லை. கொழும்பில் சுற்றித் திரிந்த வாடடிஸ்டா, கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்துள்ளார். தமிழகம் வழியாக டெல்லியில் உள்ள போலந்து தூதரகம் சென்றால், அங்கிருந்து தாயகம் திரும்பிவிடலாம் என்று அங்குள்ளவர்கள் கூறி உள்ளனர்.

போலீசாருக்கு தகவல்
அதன்படி சுமார் 1 லட்சம் கொடுத்து ரப்பர் படகை வாங்கிய வாடடிஸ்டா, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த ஜூலை 23 அதிகாலை கோடியக்கரைக்கு வந்துள்ளார். படகை முணங்காட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் நடந்தே சென்று, ஆறுகாட்டுதுறை பகுதியில் இருக்கும் கருவை தோப்பில் படுத்துள்ளார். இரவு நேரத்தில் சென்னை செல்ல வழி கேட்ட சமயத்தில் தான் அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கழுத்து கீழ் எண்கள்
இதையடுத்து அவரது பையைச் சோதனையிட்ட போலீசார், அதில் சிறிய கத்தி, போனா, வாட்டர் பாட்டில், கண்ணாடி, பிஸ்கட், செல் சார்ஜர், பவர் இருந்துள்ளது. இதனிடையே வாடடிஸ்டா கழுத்திற்குக் கீழே சில எண்களைப் பச்சை குத்தி உள்ளதால் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற ரீதியிலும் எஸ்பி ஜவகர் விசாரணை நடத்தி வருகிறார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் ஆக.8 வரை சிறையில் அடைக்க நாகை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications