Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருக்கலைப்பு... கர்ப்பிணி பரிதாப மரணம்.. தப்பி ஓடி தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமி கைது

Subscribe to Oneindia Tamil

நாகை: பொள்ளாச்சியில் கருக்கலைப்பு முயற்சியின் போது ஊசி போடப்பட்டு கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள முத்துலட்சுமியின் மகனான கார்த்திக்கையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Pregnant woman dies in Pollachi Case..Fake female doctor arrested

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வனிதா என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார், வனிதா தம்பதிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்றனர். எனவே இனிமேல் எதற்கு குழந்தை என்று முடிவு செய்துள்ளனர்.

எனவே கடந்த வாரம் சித்த மருத்துவர் முத்துலட்சுமியை சந்தித்து கருவைக் கலைக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து போலி மருத்துவர் முத்துலட்சுமி, வனிதாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார்.

இந்நிலையில் ஊசி போடப்பட்ட அன்று மாலை திடீரென வனிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரை ஏற்று சித்த மருத்துவர் வனிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே கர்ப்பிணி உயிரிழந்த தகவலை அறிந்த முத்துலட்சுமி தலைமறைவானார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முத்துலட்சுமியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+