அட வயருங்க பாதையில் கிடக்குல்ல.. எப்படிப் போவாங்க.. இழுத்து போட்டு வேலை செய்யும் நல்லுள்ளம்!
மின்கம்பிகளை சரிசெய்த ஓய்வு பெற்ற ஊழியரின் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

நாகை: பாதையில ஒயர்ங்க கிடக்குல.. எல்லாரும் எப்படி போவாங்க... என்று ஒத்தை கேள்வியை கேட்டுவிட்டு தன் வேலையை பார்க்கிறார் மனுஷன்!
கஜா புயல் தமிழகத்தை சூறையாடி விட்டது. 20 பேரையும் கையோடு கூட்டி சென்று போய் விட்டது. போகும்போது, மரங்களையும் கரண்ட் கம்பங்களையும் முறித்து போட்டு விட்டு போய்விட்டது.
இதனால் மாநில மக்கள் இயல்பு நிலையை மறந்து திண்டாடி வருகிறார்கள். பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ள மக்களுக்கு தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் மீட்பு பணியில் இறங்கி உதவி வருகிறாரகள்.

மின்கம்பங்கள்
இதில் அதிக பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம்தான். எனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர் பட்டாளமும் இணைந்து களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. வழியெல்லாம் விழுந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் தூக்கி போட்டு பாதையை சீர் செய்து வருகிறார்கள்.

அறுந்த மின்கம்பிகள்
இப்படித்தான் நாகை சாலையில் ஒருவர் செய்யும் பணி வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், விழுந்து விழுந்து எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். காலையில் 6 மணியில் இருந்து இவர் ஒத்த ஆளே அறுந்து கிடந்த மின்கம்பிகளை இந்த பக்கமாகவும், அந்தப் பக்கமாகவும் தூக்கி போட்டு சுறுசுறுப்பாகவே உள்ளார்.

உங்கள யார் அனுப்பினது?
தன்னுடன் 2 பேரை வைத்துக் கொண்டு, "இதைப்பிடி, அங்கே இழு" என்று சொல்லி மின்வயர்களை பிடித்து சரிசெய்கிறார். இதை கவனித்த ஒருநபர், அந்த பெரிவரிடம் சென்று, "நீங்கள் யார்? உங்கள யார் அனுப்பினாங்க?" என்று கேட்கிறார்.

எப்படி போவாங்க?
அதற்கு அந்த பெரியவர், "நான் ஈ.பி.-யில வேலை பார்த்து ரிட்டையர் ஆயிட்டேன். பேரு பாலசுப்பிரமணியம். எனக்கு யாரும் சொல்லி வரல. நானாதான் வந்தேன்.. பாதையில ஒயர்ங்க கிடக்குல.. எல்லாரும் எப்படி போவாங்க?" என்று நறுக்கென்று சொல்லி விட்டு வேலையை தொடர்ந்தார். இன்னும் ஈ-பியில இருந்து யாரும் வரலையான்னு கேட்டதுக்கு? "இன்னும் வரல" என்று சொன்னார்.

வைரல் வீடியோ
அறுந்து கிடக்கும் ஒயர்களும், விழுந்து கிடக்கும் மரங்களும் அந்த வீடியோவில் தெரிகின்றன. இன்னும் மாவட்ட நிர்வாகம் சார்பில் யாருமே வந்து சரிசெய்யாத நிலையில், யாருமே உதவி கேட்காத நிலையில், பாலசுப்பிரமணியம் தானாக முன்வந்து ஒயர்களை அப்புறப்படுத்தி பாதைகளை சரிசெய்வது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications