நாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு
Recommended Video

நாகை: பொள்ளாச்சியை போன்று நாகப்பட்டினத்திலும் பல பெண்களை ஏமாற்றியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சுந்தர். கால் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆழியூர் தெற்கு தெருவில் உள்ள செல்போன் கடையில் 23 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த கடைக்கு அடிக்கடி சுந்தர் வந்துள்ளதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கிட்டதட்ட ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர். சுந்தரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அந்த பெண் அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

காரைக்கால் கோயில்
எனினும் சுந்தர் அந்த பெண்ணை விடாமல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி சுந்தர் அழைத்தபடி காரைக்கால் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு அறை எடுத்து இருவரும் தங்கினர்.

புகைப்படம்
பின்னர் சுந்தர் ஒரு குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். இதில் அவர் மயங்கியவுடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து கொண்டுள்ளார்.

ஆபாச படம்
பின்னர் மயக்கம் தெளிந்து தனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது ஏன் என கேட்டு அந்த பெண் கத்தியுள்ளார். உடனே சுந்தர் தன்னிடம் இருந்த அந்த பெண்ணின் ஆபாசமான போட்டோக்களை காட்டி மிரட்டியுள்ளார்.

புகார்
இதையடுத்து அவ்வப்போது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை காட்டி அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளார் சுந்தர். இவரது டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து அந்த பெண் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications