இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் இன்று கைது!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர்.

இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீப நாட்களாக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

Tamilnadu fisherman arrested by Sri Lankan navy after attacking in mid-sea

முக்கியமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதில் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

இந்த நிலையில்தான், நாகை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால்
கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.

பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காலை 9 மணிக்கு தமிழக மீனவர்கள் அந்த முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை உடனே விடுவிக்க வேண்டும். இது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+