பட்டா மாறுதல்.. விஏஓவை தேடி வந்த வில்லங்கம்.. நாகை செல்வியை கையும் களவுமாக சிக்க வைத்த கணேசன்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்பு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் அலைய வேண்டி நிலை இருந்து வந்தது. இதை எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெறும் முறை 2011ல் கொண்டுவரப்பட்டது.

இந்த பட்டா மாறுதல் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முழு புல பட்டா மாறுதல், மற்றொன்று உட்பிரிவு பட்டா மாறுதல். பட்டா மாறுதலுக்கு மக்கள் அலைவதைத் தவிர்க்கும் வகையில் இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதில், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு சர்வே துறை மூலம் அளவீடு செய்ய வேண்டும். அதேபோல் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகலுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லாமல், இனி அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலேயே கொடுக்க முடியும்.
அப்படி அளிக்கப்படும் மனுக்களின்பேரில் உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய இனங்களுக்கு 30 நாட்களுக்குள்ளும் உரிய பட்டா மாறுதல் ஆணை மற்றும் கணினி சிட்டா நகல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். உட்பிரிவு செய்யப்படும் இனங்களுக்கு ஆணை பெறும்போது அதற்கு உரிய கட்டணத்தை பட்டா மாறுதல் கோருபவர்கள் செலுத்த வேண்டும். இதுதான் நடைமுறை.
இந்நிலையில் விஏஓக்கள் சிலர் பட்டா மாறுதல் விவகாரத்தில் லஞ்சம் வாங்கி கைதாகும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.நாகப்பட்டினத்தில் மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன் என்பவருக்கு கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் சொந்தமான இடம் இருக்கிறது. இந்த இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகியுள்ளார்.
இந்நிலையில் பட்டா மாறுதல் செய்ய தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி, கணேசனிடம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது குறித்து நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.10 ஆயிரம்) கணேசனிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற கணேசன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பணத்துடன் செல்வியை கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications