கல்வி அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்.. பரபரப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பல முறை கோரிக்கை வைத்தும், அதனை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மாணவிகள் வாகனத்தை சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

video : government school students smashing the vehicle of an education official in Bihar

பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹ்னார் பிளாக்கில் உள்ள அரசு பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மதன் சௌக் மற்றும் படேல் சௌக் இடையே மஹ்னார் என்ற ஊரில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பிரச்சனையில், அரசுப் பள்ளி மாணவிகள் கல்வித் துறை ஆய்வாளரின் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள்.

கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் கல்லை விட்டு எறிந்து அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஒரு பெண் போலீஸ் அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தாக்கியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்வி அதிகாரியின் காரை கடுமையாக தாக்கினர். கையில் கிடைத்த கற்கள், பலகை, என சிக்கிய அத்தனையையும் எடுத்து காரின் கண்ணாடியை உடைத்தனர். மாணவிகளின் இந்த அதிரடி தாக்குதலால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது.. இதனிடையே மாணவியை தாக்கிய பெண் போலீஸ் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதற்காக மறியல் செய்தார்கள்:மாணவிகள் படிக்கும் அரசு பள்ளியில், வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்துள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் இருந்துள்ளது. இதனால் உட்கார இடமில்லாத மாணவர்கள் தான் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இரண்டு ஷிப்டுகளாக பள்ளியை நடத்த முயற்சி செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற பத்திரிக்கை வெளியிட்ட செய்திகளின், வகுப்பறையில் உட்காருவதற்கு கூட இட வசதி இல்லாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்துள்னர். இதையடுத்து போலீசார், போராட்டம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அதிகாரிகள் பள்ளி மாணவிகளை அறைந்தார்களாம். அதைத் தொடர்ந்து மாணவிகள் கல்வி அதிகாரியின் காரை மொத்தமாக அடித்து நொறுக்கி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+