TVK Vijay: ஏன் சனிக்கிழமையில் பிரச்சாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே.. விஜய் நச் பதில்
நாகை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாவது வாரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாகை புத்தூர் அண்ணா சாலை பகுதியில் விஜய் பேசினார். அப்போது, சனிக்கிழமைகளில் பிரச்சார பரப்புரை மேற்கொள்வது தொடர்பான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் பிரச்சாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளார். 20க்கும் மேற்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் காவல் துறை இந்தப் பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளித்திருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்க்கு சாலை மார்க்கமாக நாகை சென்றார்.

விஜய்க்கு உற்சாக வரவேற்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புத்தூர் பகுதியில் பிரச்சார உறையை தொடங்கினார். அவர் பேசுகையில், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசி பெற்ற மண் நாகை எனது மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
நாகைக்கான திட்டங்கள்
மீன் ஏற்றுமதியில் நாகை மாவட்டம் 2 ஆவது இடம். மீனவ நண்பனாக வந்துள்ளேன். மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்திற்கு ஏதேனும் திட்டங்களை திமுக கொண்டு வந்ததா? இதனைவிடவும் இந்த அரசுக்கு வேறு ஒரு வேலை இருக்கு.. அது என்ன தெரியுமா? சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சொந்த குடும்பத்தின் சுயநலமும் தான் அந்த முக்கியமான வேலை.. இங்குள்ள மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்க
கடல் சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வரலாம்? கொண்டு வந்தார்களா? வேலைவாய்ப்புக்காக தொழில் வளர்த்தையாவது பெருக்கினார்களா? ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு பயணம் சென்று வரும் போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு.. அத்தனை கோடி முதலீடு என்று முதல்வர் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே சொல்வாரே.. சிஎம் சார்.. மனதை தொட்டு சொல்லுங்கள்.
பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு
கடந்த வாரம் பெரம்பலூர் சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்ல முடியாமல் போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாம் இந்தப் பிரச்சாரத்திற்கான திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என்கிற விமர்சனமும், கேள்வி எழுந்தது.
சனிக்கிழமை பிரச்சாரம்
உங்களுடைய எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாட்களில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. அரசியிலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் ஓய்வு நாள்களாகப் பார்த்து திட்டமிடப்பட்டது. உங்களை, நமது சொந்தங்களை சந்திக்க எத்தனை காரணங்கள்.
எத்தனைக் கட்டுப்பாடுகள்
அங்கு அனுமதியில்லை, இங்க அனுமதியில்லை என எத்தனைக் கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள். அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது என எத்தனை கட்டுப்பாடுகள். 5 நிமிடம்தான் பேச வேண்டும், 10 நிமிடம்தான் பேச வேண்டும் என எத்தனை கட்டுப்பாடு, நான் பேசுவதே 3 நிமிடம்தான், அதிலும் இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு என விதிக்கிறார்கள் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications