கடவுள் இறங்கி வந்து காட்சி கொடுப்பது மாதிரி.. 14 ஆண்டுக்கு பின் விஜய் வரார்.. உற்சாகமான தவெக தொண்டர்
நாகை: 14 ஆண்டுகளுக்கு பின் விஜய் நாகை மாவட்டத்திற்கு வருவது கடவுள் இறங்கி வந்து காட்சி கொடுப்பதை போல் பார்ப்பதாக தவெக தொண்டர் ஒரு உற்சாகம் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்க நாகை வந்த விஜய், தற்போது தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜய் திருச்சி புறப்பட்டார்.

சுமார் 40 நிமிட பயணத்திற்கு பின் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த விஜய், அடுத்ததாக சாலை மார்க்கமாக 145 கிமீ பயணத்து நாகையை அடைய உள்ளார். அவருக்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பின் புத்தூர் ரவுண்டாரானா அருகே உள்ள அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதன் காரணமாக நாகை அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். விஜய் வருகை தொடர்பாக தவெக தொண்டர் ஒருவர் பேசுகையில், நாகையில் விஜய்யின் பிரச்சாரத்தை காண்பதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். முதற்கட்ட பிரச்சாரத்திலேயே தவெக தான் நம்பர் 1 என்பது தெரிந்துவிட்டது. ஏற்கனவே போட்டி திமுக - தவெக இடையில் என்று விஜய் அறிவித்திருந்தார்.
திருச்சி பிரச்சாரத்திற்கு பின் மக்கள் மனதில் தவெக நம்பர் 1 என்று முடிவாகிவிட்டது. அதனை உறுதிப்படுத்தும் கூட்டமாக நாகையில் நடக்கவுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாகை மண்ணுக்கு விஜய் வரவுள்ளார். 2011ஆம் ஆண்டு மீனவர் பிரச்சனைக்காக விஜய் நாகை வந்து குரல் கொடுத்தார். 14 ஆண்டுகளுக்கு பின் தமிழக நலனுக்காக வருகிறார்.
மக்கள் வெள்ளத்தில் விஜய் மிதந்து வரப் போகிறார். விஜய் நாகை வருவது கடவுள் வருவதை போன்ற ஒன்று. கடவுள் இறங்கி வந்து காட்சி அளிப்பதை போன்ற ஒரு சம்பவம் இது. விஜய்க்காக மட்டுமே இங்கு வந்துள்ளோம். தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி மக்களுக்கானதாக இருக்கும். திமுக ஆட்சியை அகற்றுவதே மிகப்பெரிய மாற்றம். எம்ஜிஆர், அண்ணா, காமராசர் போல் சிறந்த ஆட்சியை விஜய் வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications