Nagercoil: ”சைரன் ஒலி பறக்க.. மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்” மருத்துவமனைக்கு இல்ல டீக்கடைக்கு!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சைரன் ஒலியை ஒலிக்க விட்டு, ஆம்புலன்ஸ் ஒன்று டிராபிக்கில் வாகனங்களுக்கு இடையே புகுந்து, மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றது. நோயாளி உயிருக்கு போராடுவதாக எல்லா வாகனங்களும் வழிவிட ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு தான் இவ்வளவு வேகமாக செல்கின்றது என நினைத்தால் எல்லாருக்கும் அதிர்ச்சியே காத்திருந்தது.
அவ்வளவு வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கடைசியில் சாலையோரம் இருந்த டீக்கடையில் போய் நின்றது. அதில் இருந்து இறங்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் சாவகாசமாக டீ அருந்திக்கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. சைரன் ஒலியை ஒளிரவிட்டப்படி அந்த வாகனம் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது. நோயாளியை விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கத் தான் இப்படி சைரன் ஒலியை ஒளிரவிட்டப்படி வேகமாக செல்வதாக சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் வழிவிட்டனர்.
வேகமாக சென்ற அந்த ஆம்புலன்ஸ் திடீரென ஒரு டீக்கடை முன்பு நின்றது. நோயாளிக்கு தான் பொருட்கள் எதுவும் வாங்குவார் என்று பார்த்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் இருந்து இறங்கி மாஸ்டர் ஒரு டீ என சொல்லி டீ குடித்துக் கொண்டு இருந்தார்.
இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறிது தூரம் பாலோ செய்த அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் போலீசார் கண்ணிலும் பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நாகர்கோவில் டிஜிபியும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்ஸ் நம்பர் பிளேட்டை வைத்து அந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் விதிமுறைகளை மீறி ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கியதாக அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications