விதிமீறல் புகார்... மூடப்பட்டது போத்தீஸ் ஜவுளிக்கடை.. அதிகாரிகளுக்கு ஒரு சபாஷ்
நாகர்கோவில்:நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விதிகளை மீறி கட்டப்பட்ட போத்தீஸ் ஜவுளிக்கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
நாகர்கோலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரிலேயே ராமவீரபுரத்தில் பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் கடை திறக்கப்பட்டது. நாகர்கோவில் நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் 5 மாடி கட்டிக் கொள்ள வரைபட அனுமதியை பெற்றது.
ஆனால், விதியை மீறி 7 மாடி கட்டிடம் கட்டிக் கொண்டதாகவும், வாகன நிறுத்துமிடம் என்று அனுமதி பெற்ற இடத்தில் காய்கறி கடை அமைத்ததாகவும் புகார் எழுந்தது. போத்தீஸ் ஜவுளிக்கடையின் விதிமீறல்கள் எதிரொலியாக கூறப்படுகின்றது.

உள்ளூர் திட்ட குழுமம் முடிவு
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ந்தேதி, போத்தீஸ் ஜவுளிக் கடையை பூட்டி சீல்வைக்க உள்ளூர் திட்டகுழும அதிகாரி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போத்தீஸ் நிறுவனம் இடைக்கால தடையாணை பெற்றதால் கடைக்கு சீல் வைக்கப்படவில்லை.

உறுதியானது விதிமீறல்
இந் நிலையில் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது போத்தீஸ் ஜவுளிக் கடையின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதால், இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நாகர்கோவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று போத்தீஸ் ஜவுளிக்கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கடையை பூட்டி சீல் வைத்தனர்.

நோட்டீஸ் ஒட்டப்பட்டது
சீல் வைத்ததற்காண காரணத்தை நோட்டீஸ் மூலம் சுவற்றிலும் அதிகாரிகள், ஒட்டிச் சென்றனர். மூடி முத்திரையிடப்பட்ட அந்த கடைக்கும் அதன் உள்ளே இருக்கின்ற பொருட்களுக்கும் போத்தீஸ் நிறுவன உரிமையாளரே பொறுப்பு என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்
இதே போல நாகர்கோவில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் விதியை மீறி கட்டப்பட்டிருந்த மேலும் 13 வணிக நிறுவனங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகள் சீல் வைத்தனர். போத்தீஸ் ஜவுளிக்கடை பூட்டப்பட்டதை தொடர்ந்து அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications