விருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு
Recommended Video
நாகர்கோவில்: மத்திய அரசு இந்தியை திணிக்க கூடாது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி எச். வசந்தகுமார் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் வரும் பொதுத் தேர்தலிலும் தோற்று விடுவோம் என்பதால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது என்றும் எச். வசந்தகுமார் குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சுமார் 11 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
எச். வசந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில்வே துறையை நம்பி 13 லட்சம் குடும்பங்கள் வாழுகின்றன. எனவே ஒருபோதும் ரயில்வே துறையை தனியார் மயம் ஆக்க கூடாது.
குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. 15 நாட்களுக்குள் இந்த சாலைகளை செப்பனிட டெண்டர் விட்டு பணிகள் துவங்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம் பின்பு மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

மத்திய அரசு இந்தியை திணிக்கிறார்கள். இதனை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தியை திணிக்கத்தான் கூடாது படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் வெற்றி கிடைக்குமா என்ற பயத்தில் அவர்கள் உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் தோற்றுவிட்டால் அடுத்து ஆட்சியில் வர முடியாது என்ற நினைப்பில் உள்ளார்கள் என்றும் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications