கன்னியாகுமரி "மசாஜ்" சென்டரில் நுழைந்த பெண்.. டக்னு பார்த்தால்?? நாகர்கோவிலுக்கு தலையே சுத்திடுச்சு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் மசாஜ் சென்டர் ரூமிலிருந்து ஏதோ வெளிச்சம் போல வந்து, மின்னி மின்னி மறைந்துள்ளது.. இதைப்பார்த்ததுமே அந்த பெண் பதறி அலறிவிட்டார்.

சமீப காலமாகவே ரகசிய கேமராக்களின் விவகாரம் தமிழகத்தில் பெருகி வருகிறது.. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர்.

Nagercoil Massage Centre and what happened in Nagercoil Ayurvedic Treatment Center

இந்த சிசிடிவி கேமராக்களை வைத்தபிறகுதான், எத்தனையோ குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் ஆதாரங்களாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன. ஆனால், சிசிடிவி அல்லாத பொது இடங்களில், ரகசிய கேமராக்களை வைத்து சில விஷமிகள், கேடுகெட்ட செயல்களில் இறங்கிவிடுகிறார்கள்..

டிசார்ட்கள்: குறிப்பாக, ஓட்டல் ரூம்கள், ஓட்டல் பாத்ரூம்கள், ரிசார்ட்கள், லாட்ஜ்களில் இந்த அட்டூழியங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. சமீபத்தில்கூட, புதுச்சேரியில் பஸ் ஸ்டாண்டு பக்கத்திலுள்ள ஜே.ஜே ரெசிடென்சி (JJ Residency) என்ற லாட்ஜில், ரகசிய கேமரா வைக்கப்பட்டது அம்பலமானது.

காதல் ஜோடி ஒன்று, இந்த ரூமில் தங்கியிருந்துள்ளது.. அன்றைய தினம் தூங்க செல்வதற்கு முன்பு, படுக்கைக்கு பக்கத்தில் இருந்த பிளக் பாயிண்ட் துளையிலிருந்து, லைட் போல மின்னி மின்னி எரிந்துள்ளது. சிறிய வெளிச்சம் வருவதை பார்த்து, அந்த இளைஞர், அருகில் சென்று, ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து பிரித்து பார்த்தபோதுதான், அதற்குள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பிறகு இந்த ரிசார்ட்டுக்கு சீல் வைத்துவிட்டார்கள்.

நாகர்கோவில்: இதோ நாகர்கோவிலில் ஒரு அட்டகாசம் நடந்துள்ளது.. நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது... இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை வழங்கப்பட்டும் வருகிறது...

இந்நிலையில், இளம்பெண் ஒருவர், அங்கு மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார்.. அங்கிருந்த பெண் ஊழியர், இளம்பெண்ணுகுகு மசாஜ் சிகிச்சை தந்துள்ளார்.. அப்போது, அந்த ரூமிலுள்ள வெண்டிலேட்டர் வழியாக, செல்போன் கேமிரா வெளிச்சத்தை, இளம்பெண் கவனித்துவிட்டார்..

கேமரா: கேமிரா மூலமாக வீடியோ ரிக்கார்ட் ஆகிக்கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய் அந்த பெண், கத்தி கூச்சலிட்டார்.. பிறகு, உடனே அங்கிருந்தபடியே, தன்னுடைய வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பிறகு, வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.. சிறிது நேரத்தில் போலீசாரும் விரைந்து வந்துவிட்டார்கள்..

அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த இளைஞரை பிடித்து விசாரணையும் மேற்கொண்டதில், திருட்டுத்தனமாக கேமராவில் ரிக்கார்ட் செய்யப்பட்டது, இளைஞரின் செல்போன்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சரமாரி வெளுத்தனர்: அந்த செல்போனில், பெண்ணின் வீடியோ காட்சிகள் அத்தனையும் பதிவாகியிருப்பதை பார்த்து, போலீசார் அதிர்ந்தனர். அதற்குள் பெண்ணின் குடும்பத்தினரும் விரைந்து வந்துவிட்டார்கள்.. போலீசார் கண்முன்னாடியே, அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினார்கள்.. இதையடுத்து, போலீசார் இளைஞரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.

இந்த இளைஞர் நம்ம ஊர் கிடையாதாம்.. மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்.. இங்கே பிழைப்பு தேடி வந்திருக்கிறார்.. ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 வருடமாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

கிளுகிளு வீடியோ: இதையடுத்து அவரது 2 செல்போன்களையும், லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை உடனடியாக ஆய்வு செய்தனர்.. அந்த லேப்டாப்பில் ஏகப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களும், கிளு கிளு காட்சிகளும் இருந்ததாம்.. ஆனால், அந்த பெண்கள் எல்லாம், இந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டவர்களா? அல்லது வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்று விசாரிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+