35 வயசு மஞ்சு.. ஜாலியா இருக்க முடியல.. 16 வயசு மகளை கொன்ற இளம் தாய்.. கேரளாவில் பரபரப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் மகளை கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
நாகர்கோவில்: கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருக்க பெத்த மகள் மீரா தடையாக இருப்பதால் மஞ்சு இப்படி செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமாங்காடு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சு. 35 வயசான மஞ்சு ஒரு இளம் விதவை. இவரது மகள் மீரா.
16 வயசாகும் மீரா நன்றாக படிக்ககூடிய பெண். நெடுமாங்காட்டில் பிளஸ் 1 படித்து வந்தார். ஒரு வீடு வாடகை எடுத்து தாயும் மகளும் தங்கி வந்தனர்.

கள்ளக்காதல்
இந்நிலையில், கணவனின் நண்பர் அனிஷ் என்பவர் அடிக்கடி மஞ்சு வீட்டிற்கு வந்து போகவும், கள்ளக்காதலாக இது மாறியது. மீரா ஸ்கூலுக்கு போய்விட்ட நேரத்தில் இருவரும் ஜாலியாக இருந்து வந்துள்ளனர். ஆனால் மீராவுக்கு ஸ்கூல் லீவு என்றால் கள்ளக்காதலர்களுக்கு செம டென்ஷன் ஆகிவிடுமாம்.

கொலை செய்தனர்
அந்த நேரங்களில் ஜாலியாக இருக்க முடியாமல் போகிறதே என்று மீரா மீது ரெண்டு பேரும் எரிச்சல் ஆனார்கள். அதனால் தாயும், காதலனும் மீராவை கொல்ல முடிவு செய்து, அதன்படி கடந்த 10-ந்தேதி அவளது கழுத்தையும் நெரித்து கொலை செய்துவிட்டனர்.

ஓடிவிட்டாள்
பின்னர் பிணத்தை வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டனர். உடல் நீரில் மிதந்துவிடாமல் இருக்க சடலத்துடன், சிமெண்ட் கட்டைகளையும் சேர்த்து கட்டி போட்டனர். பிறகு மஞ்சு, தன் அம்மாவிடம் "மீராவை வீட்டில் காணவில்லை.. யாரோ ஒரு பையனுடன் ஓடிவிட்டாள். அதனால் அவளை தேடி தமிழ்நாட்டுக்கு போகிறேன்" என்று சொல்லி கிளம்பி உள்ளார்.

நாகர்கோயில்
2 நாள் கழித்து மஞ்சுவின் அம்மா போன் செய்து பார்த்தால், செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து, சந்தேகம் அடைந்த அவர், நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்திய விசாரணையில், கள்ளக்காதலர்கள் நாகர்கோவிலில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.

கைது
அதன்பின்னர்தான் மீராவை எப்படி கொன்றோம் என்று 2 பேரும் போலீசில் சொன்னார்கள். கொலை செய்யப்பட்டு 19 நாட்களுக்கு பிறகு மீராவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications