"அந்த பொண்ணை நீ வேணும்னா".. காசியின் ஷாக் ஆடியோ.. வெளியிட்டது யார்.. பரபர தகவல்கள்
நாகர்கோயில் காசியின் ஆடியோக்கள் வைரலாகி வருகிறது
நாகர்கோவில்: "அந்த பொண்ணை நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ" என்று அந்த ஆடியோவில் நண்பர்களிடம் பேசுவது காசிதானா என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். "எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கும் வந்து இருக்காங்க.. நமக்காக அந்த அளவு அடிமைங்க இருக்காங்க" என்று பேசுவது போலவும் ஆடியோ ஒலிபரப்பாகிறது. இவைகளின் உண்மைதன்மையை போலீசார் கண்டறிந்து வருகின்றனர்.
Recommended Video
நாகர்கோவில் காசிக்கு 26 வயதுதான் ஆகிறது.. அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்துள்ளார்.. பெரும்பாலும் பணக்கார வீட்டு பெண்கள்தான் இவரிடம் சிக்கி சீரழிந்துள்ளனர்.

காசியிடம் விசாரணை நடந்து வருகிறது.. அதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.. இவரது நண்பர் ஜினோ என்ற 19 வயது நபரையும் கைது செய்து அவர் மூலமாக தகவல்களை திரட்டி வருகின்றனர்.. காசி மறைத்து வைத்திருந்த லேப்டாப்பில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே காசியின் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் இவைகளை யார் வெளியிடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. வழக்கமாக காசி நெருங்கி பழகும்போது, சம்பந்தப்பட்ட பெண்களுடன் ஆபாசமாக வீடியோ, போட்டோக்களை எடுத்து கொள்வார்.. காசியின் சுயரூபம் தெரிந்த பிறகு அந்த பெண்கள் காசியுடன் நட்பை துண்டித்து கொள்வார்கள்.. அப்போதுதான் காசி அவர்களை மிரட்ட ஆரம்பித்து, ஆபாச வீடியோவையும் காட்டி பணம் கறக்க ஆரம்பிப்பாராம்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காசியை விட்டு விலகி உள்ளார்.. சோஷியல் மீடியாவில் அவரை பிளாக் செய்தும் உள்ளார்.. அப்போது அந்த பெண்ணை காசி செல்போனில் மிரட்டி உள்ளார்.. அந்த ஆடியோவும் வெளியானது. "ஏன் என்னை போனில் பிளாக் பண்ணே? நான் நல்லவன் மாதிரி நடிக்க தெரியாதா? ஒரு ஆளை நான் செட் பண்ணி என்னை நல்ல பையன் என்று சொல்ல வெக்கட்டா? அதுக்குதானே என்கிட்ட அடி வாங்குனே? போட்டோ எல்லாம் கோர்ட்டில் செல்லாது'' என்கிறார்.
இந்த 2 லைன் பேசுவதற்குள் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த பெண்ணை திட்டுகிறார்.. ஆனால் இந்த போன் காலில் பேசுபவர் காசிதானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல, காசி பேசியதாக எடிட் செய்யப்பட்ட ஆடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஆடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.
மேலும் இன்னொரு ஆடியோவில் "அந்த பெண்ணை நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ.. எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்தும் இருக்காங்க.. நமக்காக அந்த அளவுக்கு அடிமைங்க இருக்காங்க.." என்று பேசுவதும் பதிவாகி உள்ளது.. ஆனால் காசி எந்த பெண்ணிடம் பேசுகிறார் என்ற விவரம் இல்லை.. எப்போது பேசப்பட்டது என்றும் தெரியவில்லை.. ஒவ்வொரு ஆடியோவிலும் காசியின் குரல் மட்டுமே பதிவாகி உள்ளது.. அத்தனையும் எடிட் செய்யப்பட்டு காசி குரல் குரலை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.
அந்த குரல் காசியுடையதுதானா? என உறுதியாக தெரியவில்லை.. எனினும் இந்த ஆடியோவை போலீசில் ஒப்படைக்காமல் இப்படி பொதுவெளியில் வெளியிட்டது யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.. காசிக்கு வேண்டாதவர்கள் யாராவது இதை செய்துள்ளனரா என்றும் தெரியவில்லை.. அதேசமயம், காசி பற்றி இதுவரை 3 பெண்கள் புகார் தந்துள்ளனர்.. அதனால் புகார் தொடர்ந்து வருவதால், மற்ற பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இத்தனைக்கும் காசியின் அத்தனை லேப்டாக்கள், செல்போன்கள், ஹார்ட் டிஸ்க்குகள் எல்லாமே போலீசார் கைப்பற்றி பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.. அப்படி இருக்கும்போது, எடிட் செய்து ஆடியோ வெளியிட்டது எப்படி? என்பதில் விசாரணை நடந்து வருகிறது. காசியின் நண்பர்களே இப்படி செய்து வருகிறார்களா என்ற சந்தேகமும் உள்ளது.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்! -
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம் -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications