பெண்களுடன் அராஜக நெருக்கம்.. சிக்கிய ஆபாச மன்னன்.. "எனக்காக வாதாட யாருமே இல்லையே".. கதறும் காசி!
நாகர்கோவில் காசி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
நாகர்கோவில்: பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி, நாகர்கோவிலையே கிறுகிறுக்க வைத்தவர் ஆபாச காசி.. இவர் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், "எனக்காக யாருமே வாதாட முன்வரவில்லை.. வக்கீல்கள் யாருமே உதவி செய்யவில்லை.. அதனால் என் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியவில்லை... இப்படி சட்ட உதவி இல்லாமல் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கினால் அது ஏற்புடையதாக இருக்காது... அதனால், என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்" என்று நாகர்கோவில் காசி கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி முதல் பல பெண்கள் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் காசிக்கு எல்லா உதவிகளையும் செய்த 19 வயது ஜினோ என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.. காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.. காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
அதற்கு காரணம், அந்த ஆபாச வீடியோவில் பல விஐபிக்களின் மனைவிகள் காசியுடன் நெருங்கி பழகி உள்ளது பதிவாகி இருந்தாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து காசி வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது... சிபிசிஐடி-க்கு மாறிய பிறகு பல தகவல்களை போலீசார் சேகரித்தனர்.. அவரது லேப்டாப்பில் இருந்த எல்லா ஆதாரங்களையும் அவர் அப்பாஅழித்துவிட்டதாக சொல்லி, அவரையும் கைது செய்த சம்பவமும் நடந்தது.
இதனிடையே, காசிக்கு ஆதரவாக யாருமே வாதாட மாட்டோம் என்று நாகர்கோவில் வக்கீல்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... இந்தநிலையில் காசி ஒரு மனுவை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில், "என் மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் போலீசார், நாகர்கோவில் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க எனக்கு சட்ட உதவி செய்வதற்கு வக்கீல்கள் யாருமே முன்வரவில்லை. என்னால் எனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியவில்லை... ஒரு தரப்புக்கு சட்ட உதவி இல்லாமல் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கினால் அது ஏற்புடையதாக இருக்காது... அது அடிப்படை உரிமைக்கு எதிரானதும்கூட.
அதனால், என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்... அதுவரை நாகர்கோவில் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன... அவற்றுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிடும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications