பல பெண்களை ஏமாற்றினார்.. சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை.. காசி வழக்கை கையில் எடுத்தது சிபிசிஐடி!
குண்டர் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் பெண்களை மோசடி செய்து ஏமாற்றிய கன்னியாகுமரி காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில்: குண்டர் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் பெண்களை மோசடி செய்து ஏமாற்றிய கன்னியாகுமரி காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரியில் நடந்த பாலியல் கொடூரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன் காசி என்ற சுஜி பல்வேறு பெண்களை ஏமாற்றியதும் அவர்களிடம் மிரட்டி பணம் வாங்கியதும் அம்பலம் ஆகியுள்ளது,
26 வயது நிரம்பிய இவர் கடந்த சில வருடங்களாக பல பெண்களை காதலித்து ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவர் பல பெண்களுக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார்.

பெண்கள் புகார்
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை காதலித்து இவர் ஏமாற்றி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக அந்த பெண்ணுடன் நட்பான இவர் காதலித்து, அவரிடம் லட்ச லட்சமாக பணம் பறித்து ஏமாற்றி இருக்கிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில்தான் காசி கைது செய்யப்பட்டார். அதன்பின் இவர் மீது பல பெண்கள் புகார் கொடுத்தனர். வரிசையாக இவர் செய்த குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியானது.

போக்ஸோ குற்றம்
அதேபோல் இவர் 18 வயது நிரம்பாத இளம் பெண் ஒருவரையும் ஏமாற்றி இருக்கிறார். அந்த பெண் ஆன்லைன் மூலம் குமரி போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் காசி மீது தற்போது போக்ஸோ வழக்கும் பதியப்பட்டு உள்ளது. அதேபோல் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் கோரிக்கையை ஏற்று இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி வழக்கு
இந்த நிலையில் குண்டர் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பலரின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழக டிஜிபு திரிபாதி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை இணையத்தில் உலா வருகிறது.

பெரிய அதிர்ச்சி
இதனால் இந்த வழக்கில் காசி தப்பிக்கவே முடியாது என்கிறார்கள். காசியின் போனில் நிறைய பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மருத்துவர் போலவே பல பெண்களை இவர் தமிழகம் முழுக்க காசி ஏமாற்றி இருக்கிறார். சில பிரபலங்களின் மகள்களை கூட ஏமாற்றி பணம் பறித்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications