சிரிப்பு ஆஹா சிரிப்பு.. மறக்க முடியாத என்எஸ்கே.. நினைவு கூர்ந்த நாகர்கோவில்
Recommended Video
நாகர்கோவில்: கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 62 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி கிராமத்தில் பிறந்து தனது நடிப்பாற்றலால் பொதுமக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சுதந்திர உணர்வை ஊட்டியவர் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்.

நகைச்சுவை கலை திறனால் உலக மக்களை மட்டும் அல்லாது பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த கலைவாணர் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி உலகை விட்டு பிரிந்தார். இந்த பிரிவு அந்த நாளில் கலைதுறைக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்க்கே பேரிழப்பாக கருதப்பட்டது.
கலைவாணரின் கலை திறனை சிறப்பிக்கும் வகையில் அவர் பிறந்து வளர்ந்த நாகர்கோவிலில் அப்போதைய தமிழக முதல்வர் புரட்சி கலைவர் எம்ஜிஆர் தனது சொந்த நிதியில் சிலை அமைத்து அழகு பார்த்தார். இந்நிலையில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 62 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அதன் படி நாகர்கோவிலில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்த குமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் அதிமுக கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலைவாணர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications