கொஞ்சம் கூட யோசிக்கல.. பள்ளி மாணவியுடன் "தண்டால்" கோதா! மின்னல் வேக ராகுல் காந்தி.. வியந்துபோன குமரி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பள்ளி மாணவியுடன் போட்டி போட்டு எடுத்த தண்டால் பற்றி கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க சிலாகித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    பள்ளி மாணவியுடன் தண்டால் கோதா! மின்னல் வேக ராகுல் காந்தி.. வியந்துபோன குமரி

    50 வயதாகும் ராகுல் காந்தி ஒரு பள்ளி மாணவியை விடவும் சுறுசுறுப்பாக, துடிப்புடன், மிக வேகமாக தண்டால் எடுத்து அசத்தினார்.. என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், கன்னியாகுமரி இன்று அந்த காட்சியை பார்த்தது.

    இரண்டு கைகளை பயன்படுத்தி மட்டும் கிடையாது.. ஒற்றை கையிலும் தண்டால் எடுத்து மாஸ் காட்டினார்ராகுல் காந்தி.

    கன்னியாகுமரி மாவட்டம்

    கன்னியாகுமரி மாவட்டம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் ராகுல்காந்தி. ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி மறைந்த லோக்சபா உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், தலைநகர் நாகர்கோவில் சென்று, இந்திரா காந்தி சிலை முன்பு கூடி நின்ற தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர், தக்கலை, பகுதிக்கு சென்று அங்கும் காங்கிரஸ் தொண்டர்களுடன் உரையாற்றினார்.

    போட்டிக்கு வந்த மாணவி

    போட்டிக்கு வந்த மாணவி

    முளகுமூடு பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி, மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போதுதான் அங்கு மாணவியை தண்டால் போட்டிக்கு வரச்சொல்லி சவால் விடுத்தார். கரோலின் என்ற மாணவி தண்டால் எடுப்பதில் கில்லாடி என்று கூறப்படுகிறது. அவரும் ஆவலோடு போட்டிக்கு வந்தார். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தண்டால் எடுக்கும் போட்டி ஆரம்பமானது. மின்னல் வேகத்தில் ராகுல்காந்தி கீழே சென்று மேலே வந்தார். ஆனால் அந்த இளம் மாணவி அந்த வேகத்துக்கு தண்டால் எடுக்க முடியவில்லை. அவர் ஓரளவுக்கு மெதுவாக தண்டால் எடுத்தார்.

    கரகோசங்கள்

    கரகோசங்கள்

    உடனே அங்கு இருந்த பள்ளி ஃபாதர்கள், ராகுல்காந்தியை தட்டிக்கொடுத்து கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். அது மட்டும் கிடையாது, ஒரு கையில் தண்டால் எடுக்க முடியுமா? என்று கூறி அதையும் செய்து காட்டினார் ராகுல் காந்தி. அதுவும் மிக வேகமாக இருந்தது ராகுல் காந்தி செய்தார். ராகுல் காந்தி உடல் 18 வயது வாலிபரை போல துள்ளி விளையாடியதை பார்த்து அங்கு இருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்து விட்டனர்.

    சபாஷ் தண்டால்

    சபாஷ் தண்டால்

    ஒரு இளம் மாணவியை விடவும் மிகவும் சுறுசுறுப்பாக ராகுல்காந்தி செயல்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, அவர் உடல் நலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டு இருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அதேநேரம், பயப்படாமல் கோதாவில் குதித்த மாணவி கரோலினுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ராகுல்காந்தியின் இந்த தண்டால் பற்றிதான் குமரி மாவட்டம் முழுக்க இன்று வியப்போடு பேசப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+