பாதிரியாரை சிக்க வைத்த செல்போனுடன் எஸ்கேப் ஆன இளைஞர்.. 'அதில் இருக்கும் ரகசியம்'
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள குடயால்விளையைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் வீடியோக்கள் அடங்கிய செல்போனுடன் இளைஞர் ஒருவர் எஸ்கேப் ஆகி உள்ளார்.
அந்த செல்போன் சிக்கினால் தான், அதில் இருக்கும் பல ரகசியங்களை கண்டுபிடித்து குற்றத்தை நிரூபிக்க முடியும் என்பதால், செல்போனுடன் மாயமான இளைஞரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள குடயால்விளையைச் சேர்ந்த 29 வயதாகும் பெனடிக்ட் ஆன்றோ (29) அழகியமண்டபத்தை அடுத்த பினாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக செயல்பட்டார்,

புகைப்படம் வீடியோ
பாதிரியார் பெனடிக் ஆன்றோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ மற்றும் வாட்ஸ் அப் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் பாதிரியாரை கைது செய்து விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், கடுமையான தண்டனை தர வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கொந்தளித்தனர்.

சிறையில் அடைப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாதிரியாரை கைது செய்த போலீசார், அவரது லேப்டாப்பை கைப்பற்றி சைபர் கிரைம் போலீசிடம் ஒப்படைத்தனர். அதேநேரம் விசாரணைக்கு பின்னர் பாதிரியார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

75 பெண்கள் வீடியோ
இதனிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் , நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பாதிரியாரிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில சுமார் 75-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருமகளுடன் சாட்டிங்
பாதிரியார் என மரியாதை நிமித்தமாக பழகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகள் என 3 பேரிடமும் பாதிரியார் மோசமான முறையில் வீடியோ சேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக லேப்டாப்பை பார்த்த போலீசார் கூறுகிறார்கள். பெனடிக்ட் ஆன்றோ சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக்கூடும் என்று கருதும் போலீசார், 10 நாட்களுக்குள் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள்,

எஸ்கேப் ஆன மாணவர்
இதற்கிடையே பாதிரியாரின் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு தகவல்களை பரவவிட்டதாக பாதிரியார் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அந்த மாணவரின் நண்பர் பாதிரியாரின் செல்போனுடன் தலைமறைவாகிவிட்டார். அந்த செல்போனில் பல ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேடும் போலீசார்
எனவே செல்போனை பறிமுதல் செய்ய தலைமறைவான மாணவனின் நண்பரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவரை கைது செய்து செல்போனை மீட்டால் தான், அதில் உள்ள ஆதாரங்களை திரட்டி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து இன்னும் விசாரணையை விரிவு படுத்த முடியும். இதனால் செல்போனுடன் மாயமான இளைஞரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications