அகவிலைப்படி உயர்வு.. தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பறந்த கடிதம்
நாகர்கோவில்: போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு எதிராக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டி ஓய்வூதியர் நல சங்கங்களின் சார்பாக வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டும் அரசும், நிர்வாகமும் தீர்ப்புகளை அமல்படுத்தாமல், தீர்ப்புகள் மீது மேல்முறையீடு செய்து காலதாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கம் நாகர்கோவில் மண்டல தலைவர் விஜயகுமார், செயலாளர் அர்ஜூனன், மாநில அமைப்பு தலைவர் ஆய்யாத்துரை ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்-க்கு இணையதளம் மூலம் ஒரு மனு அனுப்பி உள்ளார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: "ஓய்வூதியர்களுக்கு அரசு பென்ஷனில், அகவிலைப்படி உயர்வு இணைத்து வழங்கப்பட்டு வந்த நிலையில், அகவிலைப்படி உயர்வை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிறுத்தி விட்டது.

போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு எதிராக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டி ஓய்வூதியர் நல சங்கங்களின் சார்பாக வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டும் அரசும், நிர்வாகமும் தீர்ப்புகளை அமல்படுத்தாமல், தீர்ப்புகள் மீது மேல்முறையீடு செய்து காலதாமதம் செய்து வருகிறது.
இதனால் 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதனால், ஓய்வூதியர்கள் 9 ஆண்டுகளாக மிகவும் வறுமையில் வாடி வருகிறோம். அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓய்வூதியர்கள் மன உளைச்சலுடனே இறந்து விட்டனர். எனவே, மீதம் உயிருடன் இருக்கும் 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் உயிருடன் இருக்கம் போதே அகவிலைப்படி உயர்வு பெற இதுதொடர்பான வழக்குகளின் மீது வரைவாக நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடந்த 1-ந்தேதி முதல் இன்று(செவ்வாய்க்கிழமை) வரை தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு போக்குரவத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்க ஓய்வூதியர்கள் இணையதளம் மூலம் கடிதம் அனுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications