குக்கரும் கிடைக்கும்.. தொண்டர்களும் இருக்காங்க.. 40 தொகுதியிலும் வெல்வோம்.. தினகரன்
Recommended Video

நாகர்கோவில்: குக்கர் சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும். எனவே தொண்டர்கள் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னம் கிடைக்காதது எங்களுக்கு பின்னடைவு அல்ல. தேர்தலில் சின்னம் என்பது ஒரு பொருட்டே அல்ல.

மக்களும், அம்மாவின், தொண்டர்களும் எங்களுடன் இருக்கிறார்கள். ஆகையால் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். ஆர்.கே. நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் பிரதிபலிக்கும்.
மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் சின்னங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். குக்கர் சின்னம் நிச்சயமாக எங்களுக்கு கிடைக்கும் என்றார் தினகரன்.
Also Read | இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி. தினகரன் மேல்முறையீடு... உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் அமமுக மேல் முறையீடு செய்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications