நாகர்கோவில் மசாஜ் பண்ண 500, விருந்துக்கு 5000.. குடும்ப பெண்களை வைத்து விபச்சாரம்.. திடுக் தகவல்
நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் சிலர் வாடகை வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசார தொழில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது . இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதன், விபசார தொழிலை தடுக்கவும், இதில் ஈடுபடும் புரோக்கர்களை கைது செய்யதிடவும் உத்தரவிட்டார்.

இதன்படி நாகர்கோவில், தக்கலை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து சென்றுள்ளார்கள்.. சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு விபச்சாரம் நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளுடன் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பித்தால் போதும் தாவி குதித்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றும் லாவகமாக தப்பினார்கள். இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டார்கள். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பெண் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபசார தொழிலில் பெண் புரோக்கர்கள் தான் அதிக அளவு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த புரோக்கர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏழை, எளிய பெண்களை அழைத்து வந்து, நல்ல சம்பளத்துடன் வீட்டு மற்றும் கடை வேலைக்கு சேர்த்துவிடுகிறார்களாம்.
பின்னர், அழைத்து வரப்பட்ட பெண்களை, அவர்களின் வறுமையை காரணம் பணத்தாசையை தூண்டி விபசார தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள். இதில் வெளியூர் பெண்கள் மட்டுமின்றி உள்ளூர் இளம்பெண்களும் ஈடுபடுகிறார்களாம். மேலும், விபசார தொழில் ஈடுபடுவது பெரும்பாலானோர் திருமணமான குடும்ப பெண்களாக இருப்பதாகவும் வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளது.
மசாஜ் சென்டர்களை பொறுத்தவரை அங்கிருக்கும் பெண் புரோக்கர்கள் ஆண்களை பேச்சால் மயக்கி, தனி அறைக்கு அழைத்து செல்வார்களாம். அங்கு இளம்பெண்ணை வைத்து மசாஜ் மட்டும் செய்வதற்கு ரூ.500 கட்டணமும், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கட்டணமும் புரோக்கர்கள் வசூலிக்கிறார்களாம். இதனிடையே உரிய அனுமதி இல்லாமலும், விதிமுறைகளுக்கு மாறாக இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications