"ஆ".. ஆடைகளை களைந்து.. "அசையாமல் நின்ற கார்.. சட்டென தெருவில் ஓடிய நிர்வாண உருவம்".. காருக்குள் பெண்?
நாகர்கோவில் தெருக்களில் நபர் ஒருவர் ஆடையின்றி சுற்றித்திரிந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது
நாகர்கோவில்: அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆடையின்றி நிர்வாணமாக தெருத்தெருவாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காகவும், பொதுவெளிகளில், சாலைகளில் அல்லது தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிகளில், கடந்த சில காலமாகவே, நிர்வாணமாக உலா வரும் நபர்களின் காட்சிகளும் பதிவாகி வருகிறதாம்..

நிர்வாண கோலம்
சில சமயம் இந்த காட்சிகள் பொதுமக்களுக்கு கிலியை தந்துவிடுகின்றன.. சில சமயம், குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திவிட்டு போவதாகவும் சொல்கிறார்கள். தேனி மற்றும் கோவை பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன.. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார்களை தரவும் போலீசாரும் அது தொடர்பான விசாரணைகளை கையில் எடுத்தனர். அப்போதுதான் திருட்டு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. அதில், நான்கைந்து கொள்ளையர்கள், அரை நிர்வாணக்கோலத்தில் தெருவில் திரிந்துகொண்டே, அங்கிருக்கும் வீடுகளை நோட்டம் விடுவதும், பிறகு, எந்த வீடு பூட்டி உள்ளதோ அந்த வீட்டின் பூட்டை உடைப்பதும் பதிவாகி இருந்தது..

ஆடையின்றி பெண்
வேறு சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களை ஆராய்ந்தால், அதிலும், இப்படியே முக்கால் நிர்வாண கோலத்தில் ஒரு கும்பல் நடமாடியது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசாரும் நடவடிக்கையை எடுத்திருந்தனர். ஆனால் இவர்கள் எல்லாரும் ஏன் அரைநிர்வாண கோலத்தில் நடமாடினார்கள் என்பதுதான் கடைசிவரை தெரியவில்லை.. கடந்த மாதம்கூட, உத்தரபிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருந்தது.. நள்ளிரவு நேரத்தில் அங்கிருக்கும் ஒருவரின் வீட்டு கதவு தட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்கள் கதவை திறக்கவில்லை. மறுநாள் காலை, இரவில் யார் கதவை தட்டியது என்று வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளனர்.

வாசலில் கதறல்
அப்போது, இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில், மூச்சிரைக்க ஓடிவந்து கதவை தட்டுவது பதிவாகி இருந்தது. பிறகு, இன்னொரு வீட்டின் கதவையும் ஓடிச்சென்று தட்டி உள்ளார்.. இதை பார்த்து பதறிப்போன அந்த வீட்டின் நபர், உடனடியாக ராம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரவும், போலீசாரும் அது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர். புகார் அளித்த உள்ளூர்வாசி இதை பற்றி சொல்லும்போது, "அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும்.. புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்த பெண்ணை 2 பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்து வந்தார்கள்" என்று அதிர்ச்சி தகவலை சொன்னார்..

குளிரிலும் பெண் நிர்வாணம்
அந்த பெண்ணை பற்றின தகவலை போலீசார் வெளியிடவில்லை என்றாலும், பொதுமக்கள் கொந்தளித்துவிட்டனர்.. "எந்த ஆபத்தில் சிக்கி இருக்கிறாரோ தெரியவில்லையே? இந்த குளிரிலும் அந்த பெண் நிர்வாணமாக நடப்பது அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்?" என்று வேதனையை கொட்டி தீர்த்தனர். இதோ, நம்முடைய நாகர்கோவிலிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்து, அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.. வடசேரி கொம்மண்டை அம்மன் கோவில் தெருவில் 2 நாட்களுக்கு முன்புதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆடையின்றி நபர்
நள்ளிரவில் ஒரு சொகுசு கார் தெருவுக்குள் வந்துள்ளது.. அந்த கார் சிறிது நேரம் தெருவிலேயே நின்றிருக்கிறது.. பிறகு, சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென காரில் இருந்து கீழே இறங்கினார். ஆனால் அவர் உடலில் ஆடைகள் இல்லை.. நிர்வாண நிலையிலேயே இருந்துள்ளார்... அதே நிர்வாண கோலத்திலேயே தெருவில் அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருந்தார்.. அதே பகுதியில் ஆடையின்றி சுற்றி சுற்றி வந்தவர், பிறகு மறுபடியும் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார். இவர் நிர்வாணமாக நடந்து சென்ற காட்சிகள், அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது...

நிர்வாண கோலம்
இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. வீடுகள் நிறைந்த பகுதியில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஆனால், இந்த நபர் யார்? எங்கிருந்து வந்தார்? என்று தெரியவில்லை? எதற்காக நிர்வாண கோலத்தில் காணப்பட்டார்? அதே கோலத்துடன் ஏன் தெருவில் நடமாடினார்? என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் காரில் இருந்து நிர்வாண கோலத்தில் இறங்கி வந்ததால் கார் ஓட்டும்போதே நிர்வாண நிலையில் தான் ஓட்டிச் சென்று இருப்பாா் என்று தெரிகிறது.

மாறுது கோலம்
அவருடன் சிலர் காருக்குள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. தெருவுக்குள் காரை நிறுத்தி பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரில் இருந்து நிர்வாணமாக தள்ளாடியபடி செல்வதால் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால், இந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications