நாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. அதான் கொன்னுட்டேன்.. 2019ல் பதற வைத்த வாக்குமூலம்
தாராபுரத்தில் இளம்பெண் கொலை மறக்க முடியாத ஒன்றாகும்
Recommended Video
நாமக்கல்: கொலை, கொடூரங்கள் எவ்வளவு நடந்தாலும்.. இதன்முலம் தரப்படும் வாக்குமூலங்கள் பொதுமக்களை ரொம்பவே அதிர வைத்துள்ளன.. "நானும், புருஷனும் இருக்கும்போது.. இன்னொருத்தனுடனும் அவள் உறவு வெச்சிருந்தா.. அதான் ஓட்டலில் ரூம் போட்டு வரவழைத்தேன்... ஜாலியா இருந்தேன்.. அப்பறம் கழுத்தை துப்பட்டாவில் நெரித்து கொன்னுட்டேன்.. பிணத்தை ஒரு போர்வையில் சுத்தி, ஆத்தங்கரையில் போட்டுவிட்டேன்" என்று 24 வயது இளைஞர் தந்த வாக்குமூலத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியவில்லை.
போன மாதம் 22ம் தேதிதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது: திருப்பூர் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த திருமங்கை என்ற 33 வயது பெண்ணை காதலித்து, 5 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். ராமபுதூரில் புது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திடீரென மனைவியை காணவில்லை.
சம்பவத்தன்று, மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு போறேன் என்று ஸ்கூட்டி எடுத்து கொண்டு போனவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன ரமேஷ், மனைவியை தேடி அலைந்தார். அப்போதுதான், மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், திருமங்கை சடலமாக கிடந்தது தெரியவந்தது.

துப்பட்டா
திருமங்கையின் கைகள் துப்பட்டாவால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது... வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டு இருந்தது... கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது... தகவலறிந்து மூலனூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் திருமங்கையின் செல்போனும் ஆராயப்பட்டது.. அப்போதுதான், சேலத்தை சேர்ந்த தனபால் என்பவருடன் திருமங்கை கடைசியாக பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தபோது, தனபால் அளித்த வாக்குமூலம் இதுதான்:

நெருக்கம்
"எனக்கு 24 வயதாகிறது.. நாமக்கல்லில் ரூமில் தங்கி, பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தேன்.. அப்போ அங்க இருந்த ஒரு ஓட்டலுக்கு தினமும் சாப்பிட போவேன்.. அங்குதான் எனக்கு திருமங்கை அறிமுகம் ஆனார்.. எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.. அடிக்கடி என் ரூமுக்கும் வந்து போவார்... நாங்கள் ஜாலியாக இருப்போம். இந்த சமயத்தில்தான், ரமேஷை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனாலும் எங்களுக்குள் உறவு நீடித்தது. ரமேஷ், என்னை தவிர, வேறு ஒருவருடனும் திருமங்கை தொடர்பில் இருந்தார்.

அதிர்ச்சி
இது எனக்கு அதிர்ச்சியை தந்தது.. அதனால் எங்களுக்குள் சண்டையும் வந்தது. அந்த விஷயத்தை பற்றி பேசினாலே, அதை தவிர்த்தார் திருமங்கை.. அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று என் ரூமுக்கு வருமாறு போன் செய்தேன்.. அதன்படியே திருமங்கை வந்தார்.. வழக்கம்போல் ஜாலியாக இருந்தோம்.. பிறகு, வேறு ஒருவருடன் பழகுவது பற்றி கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் ஆத்திரத்தில் அறைந்தேன்.. இதில் கீழே மயங்கி விழுந்துவிட்டார்.

வாக்குமூலம்
உடனே அவரது துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன்.. கைகளையும் அதே துப்பட்டாவால் கட்டி, சடலத்தை ஒரு போர்வையால் சுற்றி, வேனில் வைத்து கொண்டு போய், அமராவதி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டேன்" என்றார். இப்போது இந்த இளைஞர் சிறையில் இருந்தாலும், தவறான வழியில் ஒரு பெண், அல்லது ஈடுபட்டால் அதன் முடிவு மிக கொடூரமாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது இந்த சம்பவம்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications