சிதறிய உடல்கள்.. அலறிய நாமக்கல்.. 5 பெண்கள் உசுரு போச்சே! கண்டெய்னர் மீது மோதி சின்னாபின்னமான கார்
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் - சங்கர் கோயிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான வேடுபறி வைபவம் நேற்று நடைபெற்றது.

இந்த திருவிழாவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் காரில் சென்று கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
ரவி என்பவரது மனைவி கவிதா காரை ஓட்டிச்சென்று உள்ளார். அவருடன் கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா ஆகிய பெண்கள் காரில் சென்று இருக்கிறார்கள். 7 பேரும் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் மீண்டும் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது இந்த கார் மோதியது. இதனை அடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர். அதே நேரம் காரில் சென்ற 5 வயது குழந்தை மற்றும் மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். சாலை விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது திருச்செங்கொடு சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications