நாமக்கல் தேவி வீட்டில் முடிவுக்கு வந்த நல்ல நேரம்... கிராம நிர்வாக அலுவலருக்கு தேடி வந்த வில்லங்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த புதுப்புளியம்பட்டி பகுதி பனைமரங்கள் வெட்டியதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் உதவியாளர் மற்றும் கணவரும் இந்த லஞ்ச புகாரில் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டில் சென்று நடந்த லஞ்சப்பொறியில் மொத்தமாக சிக்கியுள்ளார்கள்.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும்.ஆனால் எதார்த்தத்தில் பலர் 3 நாளில் முடிய வேண்டிய வேலையை ஒரே நாளில் முடிக்க வற்புறுத்தி லஞ்சம் வாங்குகிறார்கள். அந்த பழக்கமே லஞ்சம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் பழகிய சில அரசு ஊழியர்கள், லஞ்சம் கொடுப்பவர்களின் பணிகளுக்கு முக்கியத்துவம் தருவதால், லஞ்சம் தராதவர்களின் பணிகள் கிடப்பில் போடப்படுகிறது.

இதனால் அலைச்சலுக்கு பயந்து அவர்களும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.. சில அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தால் பைல் நகரும் என்று மிரட்டுகிறார்கள். சிலர் லஞ்சம் வாங்க வேண்டும் என்பதற்காவே அலையவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பனைமரங்கள் வெட்டியதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் விஏஓ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பனை மரங்களை வெட்டக்கூடாது என்பது விதியாகும். ஆனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த புதுப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார் (வயது 40). இவா் தனது நிலத்தில் இருந்த 6 பனை மரங்களை வெட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க புதுப்புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், ரூ.40 ஆயிரம் லஞ்சம் செந்தில்குமாரிடம் கேட்டாராம்
இதையடுத்து விவசாயி முதல் கட்டமாக ரூ.20 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணம் கொடுக்க முடியாமல் செந்தில்குமார் தடுமாறிய போது கட்டாயப்படுத்தி குணசேகரன் கேட்டு மிரட்டினாராம், இதனால் செந்தில்குமார் நடந்தவற்றை கூறி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை செந்தில்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கொடுக்க அவர் நேற்று கிராம நிர்வாக அலுவலரை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அப்போது குணசேகரன் தான் வெளியில் இருப்பதாகவும், கிராம உதவியாளர் தேவி என்பவர் வீட்டில் சென்று கொடுத்து விடும்படியும் கூறினாராம். இதையடுத்து செந்தில்குமார், கிராம உதவியாளர் தேவி வீட்டுக்கு லஞ்ச பணத்தை கொடுக்க சென்றார். அங்கு தேவியின் கணவர் விஜயகுமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை அவர் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும், தேவியையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் (53), கிராம உதவியாளர் தேவி (39), அவரது கணவர் விஜயகுமார் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications