நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் போலீசிடம் எகிறிய யுவராணி..நடுரோட்டில் மல்லுக்கட்டு..விசாரித்தால் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் திருட்டு வழக்கில் கணவரை கைது செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார் மனைவி. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் உள்ள திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறி போலீசார் அழைத்து செல்ல முயன்றுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து மனைவி போராடினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நடந்து வரும் திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வசித்து வந்த இளைஞரை கர்நாடகா மாநில போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது மனைவி, தன்னுடைய கணவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறி, கர்நாடகா போலீசாருடன் மல்லுக்கட்டினார். இந்த சம்பவத்தால் பள்ளிப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

namakkal police erode

கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டி, கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள கேஎன் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகபுஷ்பத்திற்கு 26 வயது ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணை கடந்த நான்கு வருடம் முன்பு காதல் திருமணம் செய்தார்.. பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த எஸ்எஸ்பி காலணி பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.. அவர்கள் இருவரும் அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்று வாழ்ந்து வருகிறார்கள்.

நேற்று கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள புதுக்கோட் போலீசார், இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக நாகபுஷ்பத்தின் செல்போனை தொடர்பு கொண்ட போலீசார், பின்னர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு வந்தனர். அப்போது நாகபுஷ்பத்தை கர்நாடகா போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவரது மனைவி யுவராணி, அங்கு உடனடியாக சென்று, தடுத்து நிறுத்தினார். எனது கணவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அழைத்து செல்ல விடமாட்டேன் என்று கூறி நடுரோட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பெண், எனது மாமனாரிடம் காசு வாங்கி கொண்டு எங்களை தனித்தனியாக பிரிக்க பார்க்கிறார்கள்.. அதுக்கு தான் இவர்கள் எல்லாருமே பிளான் செய்கிறார்கள்.. இவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் கேஸ் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் எல்லாமே பொய் கேஸ் " என்றார். இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+