ஒன்றரை கிலோ மட்டன், சிக்கன்!கிரவுண்டில் ஓட ஓட விரட்டிய டீச்சர்..பள்ளி நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூரி
பள்ளியில் படிக்கும் போது வாத்தியாருக்கு சிக்கன், மட்டன் கொடுத்து பாஸ் செய்தேன்- நடிகர் சூரி கலகல
நாமக்கல்: பள்ளியில் படிக்கும்போது வாத்தியாருக்கு சிக்கன், மட்டன் கொடுத்துதான் பாஸ் ஆனேன் என கல்லூரி விழா ஒன்றில் நடிகர் சூரி கலகலப்பாக பேசினார்.
தமிழ் திரையுலகில் காமெடியனாக நடித்து வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா காமெடியில் நடித்திருந்ததால் அவருக்கு பரோட்டா சூரி என பெயர் கிடைத்தது.
தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் காம்போவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் நகைச்சுவையாக பேசிய சம்பவம் அடக்கமுடியாத சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் உங்களை எல்லாம் வாத்தியார்கள்தான் பாஸ் செய்ய வைத்திருப்பார்கள். ஆனால் என்னை என் அப்பாதான் பாஸ் செய்ய வைத்தார்.

மதுரைக்கு போக வேண்டியிருந்தது
6ஆம் வகுப்ப படிக்க மதுரைக்கு போக வேண்டியிருந்தது. படிப்பு முடிக்கும் போது எங்கள் அப்பா பள்ளிக்கு வந்தார். குட் மார்னிங் டீச்சர், மை மை நேம் ஆர்.முத்துசாமி, மை ஃபாதர் நேம் இஸ் ராமசாமி. மை சன்ஸ் நேம் ராம் அண்ட் லட்சுமணன், தே ஆர் டுவின்ஸ், ராம் கலெக்டர், லட்சுமணன் என்ஜினீயர். எப்படியாவது நீங்கள்தான் கொண்டு வர வேண்டும் சார்.

ஃபாதர்
ஹேஸ் ஏ ஃபாதராக நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் சார். இதுல ஒன்றரை கிலோ மட்டன், ஒன்றரை கிலோ சிக்கன் இருக்கு. Anytime telling i will coming என்றார். உடனே நான் 6ஆம் வகுப்பு பாஸ் ஆகிவிட்டேன். 7ஆவது வகுப்பிலும் அதே ஒன்றரை கிலோ சிக்கன், ஒன்றரை கிலோ மட்டன் கொடுத்துதான் நான் பாஸ் ஆனேன்.

8ஆம் வகுப்பு
அதன் பிறகு 8ஆம் வகுப்பில் என்னை வழக்கம் போல எங்க அப்பா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த டீச்சரிடம் என் அப்பா குட்மார்னிங் டீச்சர் என்றார். உடனே நான் அப்பா வேண்டாம் , நிறுத்துங்க என்றேன். ஆனால் என் அப்பா நான் சொல்வதை கேட்கவே இல்லை, வழக்கம் போல் 6ஆம் வகுப்பு டீச்சரிடம் பேசிய டயலாக்கை கூறிவிட்டார்.

சைவ டீச்சர்
பின்னர் இதில் ஒன்றரை கிலோ சிக்கன் இருக்கு ஒன்றரை கிலோ மட்டன் இருக்கு என்றார். உடனே அந்த டீச்சருக்கு கோபம் வந்தது. என் அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த கறி பையை டீச்சரிடம் திருப்பி கொடுத்தார். அப்போது அந்த டீச்சர் எங்களை கிரவுண்டில் ஓடவிட்டார். அப்போது என் அப்பா ஏன் என கேட்டார், அதற்கு நான் சொன்னேன் அப்பா அந்த டீச்சர் சுத்த சைவம் என கூறி தனது பள்ளி அனுபவங்களை கூறினார். இதை கேட்ட மாணவர்கள் சிரித்தனர்.

அம்மன் உணவகம்
நடிகர் பரோட்டா சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையில் நிறைய இடங்களில் உள்ளது. இந்த ஹோட்டல்களில் இரு முறை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications